பக்கம்:சைவ சமயம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சோழர் காலத்தில் சைவசமயம்

யினர். திருப்பூந்துருத்திக் கோவில் ஆதித்த சோழன் மனைவியாலும், திருவூரல் கோவில் முதற் பராந்தகன் மகளாலும், செம்பியன் மாதேவியில் உள்ள கோவில் உத்தமசோழன் மனைவியர் ஐவரா லும், திருவெண்காடு, திருவிசலூர், திருவையாறு இவற்றிலுள்ள கோவில்கள் முதலாம் இராசராசன் மனைவியராலும், திருவலஞ்சுழியில் உள்ள சிவன் கோவில் முதலாம் இராசராசன் மகளாலும், திரு விசலூர், உடையார்குடி இவற்றிலுள்ள கோவில் கள் முதலாம் இராசேந்திர சோழன் மனைவியரா லும், திருவிடை மருதூர், காஞ்சீபுரம், ஆர்ப்பாக்கம் கோவில்கள் முதற் குலோத்துங்கன் மனைவியரா லும், சிதம்பரம் கோவில் முதற் குலோத்துங்கன் சகோதரிகளாலும், திருவிடை மருதூர்க் கோவில் விக்கிரம சோழன் மனைவியராலும், திருமழபாடிக் கோவில் இரண்டாம் குலோத்துங்கன் மனைவியரா லும், திட்டைக்குடிக் கோவில் இரண்டாம் இராச ராசன் மனைவியராலும், திருவெண்ணெய் நல்லூர்க் கோவில் மூன்ரும் இராசேந்திரன் மனைவியாலும் திருப்பணிகளிலும் தான வகைகளிலும் சிறப் புற்றன. - சிற்றரசரும் திருப்பணிகளும்

சோழப் பேரரசர்க் கடங்கிய நுளம்பாதிராசர் முதலியோர் பேரரசரைப் பின்பற்றித் தமிழகத்தில் பல கோவில்களில் பலவகைத் திருப்பணிகள் செய் துள்ளனர். நுளம்பாதிரர்சர், யாதவராயர், சாம் புவராயர், வாணகோவரையர், பொத்தப்பிச்சோழர், மிழலை நாட்டுத் தலைவர், வைதும்ப மகாராசர், சேதிராயர், மழவராயர், காடவராயர், முத்தரை யர், முனையதரையர் என்ற சிற்றரசர்கள் தில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/55&oldid=678197" இலிருந்து மீள்விக்கப்பட்டது