பக்கம்:சைவ சமயம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 57

திருநாவலூர், திருக்காளத்தி முதலிய ஊர்க்கோவில் களில் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் நடுநாட்டில் உள்ள சேந்தமங்கலத்தை ஆண்டு வந்தவன். இவன் வீரத்திலும் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினன் , தில்லைக் கோவிலில் தெற் குக் கோபுரத்தைக் கட்டினுன் , ஆக்கூர்க் கோவி லைப் புதுப்பித்தான் , திருமுதுகுன்றம் முதலிய பல கோவில்களுக்குத் தானங்கள் அளித்தான். இவ னும் இவன் மனைவியும் திருவண்ணுமலைக் கோவி லுக்குத் தானங்கள் அளித்தனர். இவன் மகளுன மகாராச சிம்மன் தில்லையில் கிழக்குக் கோபுரத்தைக் கட்டினன். திரிபுராந்தகம், திராட்சாராமம், காளத்தி, காஞ்சி, திருவதிகை, மதுரை என்னும் இடங்களி லுள்ள சிவன் கோவில்களுக்கு நிபந்தங்கள் விடுத் தான். கோப்பெருஞ்சிங்கனும் அவன் குடும்பத் தாரும் செய்த திருப்பணிகளைக் கொண்டே, பிற சிற்றரசரும் அவர் குடும்பத்தாரும் செய்த திருப் பணிகளை ஒருவாறு உய்த்துணரலாம். காலிங்கராயன் திருப்பணிகள்

முதற் குலோத்துங்கன் தானத்தலைவளுன நரலோக வீரன் என்ற காலிங்கராயன் செய்துள்ள திருப்பணிகள் அளவிறந்தன. இவன் சித்தலிங்க மடத்தில் சிவனுக்குக் கற்றளி எடுத்தான் ; திரு புவனை, திருப்புகலூர்க் கோவில்களில் மண்டபங்கள் அமைத்தான் ; வேறு பல தானங்களையும் செய் தான். இப்பெருமகன் தில்லையில் செய்துள்ள திருப்பணிகள் பலவாகும். அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை-(1) தில்லைக்கும் கடலுக்கும் நடு 6. A. R. E. 1906, P. 64.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/56&oldid=678198" இலிருந்து மீள்விக்கப்பட்டது