பக்கம்:சைவ சமயம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சோழர் காலத்தில் சைவசமயம்

வில் அகன்ற சாலையை அமைத்தமை, (2) கடற் கரையில் மாசிமகத்தின்போது கடவுள் தங்க மண்ட பம் சமைத்தமை, (3) கோவிலில் நூற்றுக்கால் மண்டபம் அமைத்தமை, (A) மூவர் தேவாரத்தை யும் செப்பேடுகளில் எழுதுவித்தமை, (5) தேவாரம் ஓத மண்டபம் அமைத்தமை என்பன. "

இவன் திருவதிகையிலும் பல திருப்பணிகள் செய்துள்ளான். அவற்றுள் - (1) நூற்றுக்கால் மண்டபம் கட்டினமை, (2) அப்பர்க்குத் தனிக் கோவிலை அமைத்தமை, (3) அப்பரது மடத்திற்கு 48 ஆயிரம் குழி தானம் செய்தமை, (4) அதிகைக் கோவிலைச் சுற்றி அகன்ற திருச்சுற்றை அமைத் தமை, (5) நாடகசாலை அமைத்தமை என்பவை

குறிக்கத்தக்கவை. 8

முடிவுரை

இவ்வாறு பேரரசர், சிற்றரசர் அரசாங்க அலு வலர் செய்த திருப்பணிகளால் தூண்டப்பட்ட வணி கர் முதலிய குடிமக்கள் தத்தம் நிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கோவிலிலும் தானங்கள் செய்துள்ளனர் என்பதைப் பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சுருங்கக்கூறின், சோழர் காலத்தில் அரசன் முதல் ஆண்டி ஈருக இருந்த அனைவரும் சமயத் தொண் டில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறுதல் பொருத்த மாகும். .

பாடல்பெற்ற கோவில்கள் எல்லாம் சோழர் காலத்தில் கற்றளிகளாக மாறின ; சிறிய கோவில் கள் பெரிய கோவில்களாக மாற்றப்பட்டன. ஒவ்

7. S. Í. I. 4. 225. 8. 369 of 1921 ; GlæsöSlEýþ Vol.

28, PP, 93-100. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/57&oldid=678199" இலிருந்து மீள்விக்கப்பட்டது