பக்கம்:சைவ சமயம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 59

வொரு கோவிலிலும் நாட்பூசனையும் விழாக்களும் சிறப்புற நடைபெற நிலமும் பொருளும் வழங்கப் பட்டன. கோவில் சொத்துக்களைக் கண்காணிக்க ஆட்சிக்குழு அமைந்திருந்தது. கோவிலுக்கு அவர வர் செய்த தானபத்திரங்கள் சிவபண்டாரத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. அதே சமயத்தில் அவை கோவில் சுவர்களிலும் வெட்டுவிக்கப்பட்டன. எல்லாக் கோவில்களின் வரவு செலவும் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டு தோறும் தணிக்கை செய் யப்பட்டன. கோவில்களில் பெருமக்கள், ஊரவை யார் என்பவர் முன்னிலையில் கோவில் நகைகளை மதிப்பிட்டுக் கணக்கிட்டனர். வருவாயற்ற கோவில் கள் வருவாயிருந்த கோவில்களின் பொருளுதவி யால் கவனிக்கப்பட்டன. இத்தகைய திட்டமான கோவிலாட்சியால் பொதுமக்கள் கோவில் செல்வத் தைப் பெருக்க முனைந்தனர். அதனுல் கோவில்கள் செல்வ வளத்தில் பெருகின; பக்தர்களின் அறங் கள் குறைவின்றி நடந்தன. கோவில் பணியாட் கள் தத்தம் கடமைகளைத் தவருது செய்தனர். கோவில்களில் சமயத் தொடர்பான ஆடல், பாடல், நாடகம், திருமுறை ஓதுதல், சமய போதனை செய் தல் என்பன காலம் தவருது நடைபெற்றன. இத் தகைய சிறப்புக்களால் சோழராட்சியில் சைவசமயம் பெருஞ்சிறப்புற்று விளங்கியது என்று கூறுதல் பொருத்தமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/58&oldid=678200" இலிருந்து மீள்விக்கப்பட்டது