பக்கம்:சைவ சமயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருக்கோவில் வளர்ச்சி

முன்னுரை

நாயன்மார் காலத்தில் (கி. பி. 800-900) மிகச் சிறியனவாக இருந்த கோவில்கள் அழிந்துவிடத் தக்க மண், மரம், செங்கல், சுண்ணும்பு, உலோகம் இவற்ருல் கட்டப்பட்டவை. எனவே, அவை அழிந்துவிடும் இயல்பின. பல்லவர்க்குப் பின்வந்த சோழர்கள் (கி. பி. 900-1300) இவ்வுண்மையை உணர்ந்து, இவற்றைக் கருங்கற் கோவில்களாக மாற்றினர். பாடல்பெற்ற கோவில்களுட் பல மலை யில்லாத சமவெளிப்பகுதியில் இருந்தனவாயினும், மலைப் பகுதிகளிலிருந்து சோழர்கள் கற்களைக் கொண்டு சென்று, பண்டைக்கோவில்களைக் கற்ற ளிகளாக மாற்றினர்; இங்ங்ணம் மாற்றியதோடு அமையாது, பழங்கோவில்களைப் பெரியனவாகவும் அமைத்தனர். •. கோவில் வளர்ச்சி

சாதாரணமாக ஒவ்வொரு கோவிலும் கரு வறை, நடுமண்டபம் இவற்றைப் பெற்றிருந்தது; பின்னர் முகமண்டபம் அமைந்தது. கோவிலைச் சுற்றிலும் முதல் திருச்சுற்றும் மதிலும் அமைந் தன. முதல் திருச்சுற்றில் சண்டீசர்க்குத் தனிக் கோவில் அமைந்தது. அத்திருச்சுற்றில் வலம் வரும் முறையில் தென் கிழக்கில் சூரியனும், தென் மேற்கில் கணேசரும் சப்த கன்னியரும், மேற்கில் சுப்பிரமணியர், வடமேற்கில் ஜேஷ்டர், வடக்கே சண்டேசுவரர், வடகிழக்கில் சந்திரன் இடம் பெற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/59&oldid=678201" இலிருந்து மீள்விக்கப்பட்டது