பக்கம்:சைவ சமயம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருக்கோவில் வளர்ச்சி

பயன்பட்ட திருக்கைக் கோட்டி மண்டபம், நூற்றுக் கால் மண்டபம் என்பன பல கோவில்களில் இடம் பெற்றன. திருவக்கரையில் ஆயிரக்கால் மண்டபம் இருந்தது. மாளிகை மடம் முதலியன

சில கோவில்களில் மாளிகைகள் இருந்தன. நீடூர்க் கோவிலில் இருந்த மாளிகை 'புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை எனப் பெயர் பெற்றது.

திரு மாளிகைத் தேவர் மாளிகை மடத்து முதலியார்’ என்னும் பெயர்களைக் காண, இம் மாளிகைகள், சைவ சமயப் பெரியோர்கள் தங்கி யிருக்கவும் மக்கட்குச் சமய போதனை வழங்கவும் பயன்பட்டவை என்பது தெரிகிறது. பல பெரிய கோவில்களில் மடங்கள் இருந்தன. அவற்றில் சைவ சாத்திரங்களில் வல்ல துறவிகளும், சாத்திர மாணவர்களும் இருந்தனர். அத்தகைய மடங்கள் இருந்த கோவில்களில் சரசுவதி பண்டாரம் ’ என்ற நூல் நிலையம் இருந்தது. திருமுக்கூடல், எண்ணுயிரம், திரிபுவன, திருவொற்றியூர், வேம் பற்றுார், திருவாவடுதுறை என்ற இடங்களில் கல்லூரிகள் இருந்தமையால், அங்கு நூல் நிலையங் கள் அமைந்திருந்தன என்று கூறுதல் மிகை யன்ருே ? அம்மனுக்குத் தனிக்கோவில்

பல்லவர் காலத்தும் பிற்காலச் சோழர்காலத்து முதற்பகுதியிலும் சிவன் கோவிலில் அம்மனுக் கென்று தனிக்கோவில் ஏற்படவில்லை. இறைவன் கருவறையிலேயே போக சக்தி அம்மன் எனத்

தனித்திருமேனி வைத்து வழிபடப்பட்டது. கி. பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/61&oldid=678203" இலிருந்து மீள்விக்கப்பட்டது