பக்கம்:சைவ சமயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 63

11-ஆம் நூற்ருண்டில் முதல் இராசேந்திரனது எண்ணுயிரங் கல்வெட்டே முதல் முதலாக அம்மன் தனிக் கோவிலைப் பற்றிக் குறிக்கின்றது. அதன் பிறகே அம்பிகைக்குத் தனிக் கோவில்கள் எடுக்கப் பட்டன. பின்னரே அம்மன் கோவில்கள் சிவன் கோவில்களில் புதியனவாக ஏற்பட்டன என்பதைப் பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. விநாயகர் கோவில்

பாடல்பெற்ற கோவில்களில் நாயன்மார் காலத் தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரிய வில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வமல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத் தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத்தொண்ட நாயனுர் சாளுக்கியர் தலைநகரமான வாதாபியைக் கைப்பற்றியபோது, இப் புதிய கடவுளை அங்குக் கண்டார்; தாம் முன்னர்க் கண் டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப் புற்று, அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராள தேவன் கோவிலில் வைத்து வழிபடலானர். அது முதல் சீராள தேவன் கோவில் கணபதிச்சரம் ’ எனப் பெயர்பெற்றது என்பது தெரிகிறது. இக் கணப்தீச்சரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப் புதிய கடவு ளுக்கும் சிவபெருமானுக்கும் உறவு முறை கற்பிக் கப்பட்டது; அதன் பயனுக விநாயகர் சிவபெருமா னுக்கு முதல் திருமகளுராகக் க்ருதப்பட்டார் 1, A. R. E. 1913, P, 83.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/62&oldid=678204" இலிருந்து மீள்விக்கப்பட்டது