பக்கம்:சைவ சமயம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. திருக்கோவில் வளர்ச்சி

'முத்தபிள்ளையார்' என்று 11-ஆம் திருமுறையில் இவர் இடம்பெறலார்ை. இவரைக் கணங்களுக்குப் பதியாகவும், துன்பந் துடைப்பவராகவும் தமிழர் கருதித் தங்கள் வழிபாட்டில் முதல் வணக்கத்தை இவர்க்கு உரிமையாக்கினர். இதற்ைருன் பெரிய புராணம் முதலிய பிற்பட்ட நூல்களில் விநாயகர் வணக்கம் தோற்றமெடுத்தது. இவ்விநாயகர் வாதா பியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை, " வாதாபி கணபதி, பஜேம் பஜேம் ” என்னும் தோத்திரத்தாலும் நன்குணரலாம். இவர் சிவ னுக்கு மகளுனமைபற்றி ஒவ்வொரு சிவன் கோவி லிலும் இவருக்குத் தனிக்கோவில் ஏற்பட்டது.

முருகன் கோவில் -

முருகன் தமிழ் நாட்டுத் தெய்வம்; குன்று தோருடுங்குமரன்; இப்பெருமான் குறவர் கோமான் மகளாகிய வள்ளியம்மையை மணந்தது இயல்பே. ஆனல் வடமொழியாளர் தமிழகத்திற்கு வந்து கலந்தபிறகு, முருகன் சுப்பிரமணியன் ஆக்கப்பட் டான்; அதன் பயணுக, இந்திரன் மகளாகிய தெய்வானையம்மை அவனுக்கு மற்ருெரு மனைவியா கக் கிடைத்தாள். வட நாட்டில் வேத காலத்தில் இல்லாத சுப்பிரமணியன், இதிகாச காலத்தில் தெய்வமாக வழிபடப்பட்டான். சைவ வழிபாடு பெருகப்பெருக, வடவர் கலப்பு மிக மிக, இருவரது சமயச் சேர்க்கையின் பயணுக முருகன் சுப்பிரமணி யனாகிச் சிவனுக்கு இரண்டாம் திருக்குமாரகுைம் பேறு பெற்ருன். இதிகாசங்களிலும் முருகப் பெருமான் "சிவபெருமான்” என்றே கூறப்படு

2. T. R. சேஷ ஐயங்கார், திராவிட இந்தியா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/63&oldid=678205" இலிருந்து மீள்விக்கப்பட்டது