பக்கம்:சைவ சமயம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 73

கோவில்களாகவே குடைந்து அமைத்தனர்; இவை ஒற்றைக் கற்கோவில்கள் எனப்படும். இவையே இன்று மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று தவருகக் கூறப்படுகின்றன. பின் வந்த பல்லவர்கள் பாறைகளைக் கற்களாக உடைத்து, இக்காலத்திலுள்ள கற்கோவில் களைப் போல அமைக்கத் தொடங்கினர். கயிலாச விமானம், தூங்கு ஆனை விமானம் என்ற இருவகை விமானங் களும் இக்கோவில்களில் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் முதன்முதல் கட்டப்பட்ட கற் கோவில் காஞ்சி கயிலாசநாதர் கோவிலாகும். அது பல்லவர் காலத்துக் கட்டடக் கலைக்கும் சிற்ப வளர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பல்லவப் பேரரசு அழிந்து சோழப் பேரரசு ஏற்பட்டதும் சிறந்த சிவபக்தரான சோழ மன்னர் கள் பாடல்பெற்ற கோவில்களை எல்லாம் அழியாத கற்கோவில்களாக மாற்றினர்; தாமும் வானளா விய விமானங்களைக்கொண்ட பெரிய கோவில்களை எடுப்பித்தனர்; பல்லவர் காலத்தில் இருந்த கோவில் ஆட்சியை விரிவுபடுத்தினர். சோழர்கட்குப் பின் வந்த விஜயநகர வேந்தர்கள், விமானங்களை உயர்த்தாது, வானளாவிய கோபுரங்களைக் கட்டி மகிழ்ந்தனர்; மிகப் பெரிய திருச்சுற்றுக்களையும் ஆயிரக்கால் மண்டபங்களையும் அழகுற அமைத் தனர். * - திருப்பதிகங்கள்

சுந்தரர் காலத்திலேயே திருவல்லம் திருக்கோ விலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யப்பட்டது என்று கல்வெட்டுக் கூறுகின்றது. சோழர்கள் காலத்தில் திருமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/72&oldid=678214" இலிருந்து மீள்விக்கப்பட்டது