பக்கம்:சைவ சமயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கல்வெட்டுக்களும் சைவசமயமும்

நாசிக்கிலுள்ள திரயம்பகேசுவரலிங்கம், கெளத மேசலிங்கம், காசி விசுவேசுவரலிங்கம், திருக் கேதாரலிங்கம், தச்சினியிலுள்ள பீமசங்கரலிங்கம், இராமேசுவர லிங்கம் என்னும் பன்னிரண்டும் மிக்க பழைமை வாய்ந்தவை என்று நூல்கள் கூறும். திருப்பதியை அடுத்துள்ள குடிமல்லம், களத்தூர், குடிமியான்மலை இவற்றில் உள்ள லிங்கங்கள் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையை உடையவை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

குப்தர் காலத்தில் சைவம் வட இந்தியாவில் நன்கு வளர்ச்சி பெற்றது. கி. பி. 6-ஆம் நூற்ருண் டில் வாழ்ந்த வராகமிகிரர் என்ற வானநூல் வல் லார் லிங்கங்களை அமைக்கும் முறை பற்றி மிக நுட்பமாக எழுதியுள்ளார். ஏறத்தாழ அதே காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் திருமூலர் லிங்கங்கள் அமைப்பது பற்றித் தமது திருமந்திரத் தில் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். கோவில்கள்

கி. பி. 7-ஆம் நூற்ருண்டில் தோன்றிய அப்பர் சம்பந்தர் பாடல்களை நோக்க, தமிழகத்தில் வைப் புத்தலங்கள் உட்பட ஏறத்தாழ 500 சிவன் கோவில் கள் இருந்தன என்று கூறலாம். அவையனைத்தும் அழியத்தக்க செங்கல், மண், சுண்ணும்பு, மரம், உலோகம் இவற்ருல் ஆனவை. ஆதலால் 7-ஆம் நூற்ருண்டில் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட மகேந்திரவர்மன் முதலிய பல்லவர்கள். கற்கோவில்களை அமைத்தனர்; மலைச் சரிவில் நடுப்பகுதியைக் குடைந்து மண்டபம் போன்ற கோவிலை அமைத்தனர். இக்கோவில்கள் குடை வரைக் கோவில்கள் எனப்படும். சிறிய பாறைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/71&oldid=678213" இலிருந்து மீள்விக்கப்பட்டது