பக்கம்:சைவ சமயம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கல்வெட்டுக்களும் சைவசமயமும்

சைவத்தின் பழைமை

சைவ சமயம் உலகப் பழைய சமயங்களுள் ஒன்று. அஃது இந்தியாவில் சிந்துவெளி நாகரி கத்துக்கும் (ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு) முற் பட்ட பழைமை உடையது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இச்சமயத்தின் சிறப்பு வழிபாடு லிங்க வழிபாடாகும். இந்த லிங்க வழிபாடு ஆரியர் வருகைக்கு முற்பட்டதாகும். இ த னை முதலில் வெறுத்த ஆரியர், பின்பு கைக்கொண்டனர். மாபாரதம் எழுதப்பட்ட காலத்தில் சிவன் மகா தேவனுக்கப்பட்டான். இதற்குக் காரணம் ஆரி யர்க்கு முற்பட்ட இந்திய மக்களுள் மிகப் பலர் லிங்க வழிபாட்டை மேற் கொண்டிருந்ததேயாகும்.?? மிகப்பழைய லிங்கங்கள்

கஜினி முகம்மதுவால் அழிக்கப்பட்ட சோம நாதபுரத்து லிங்கம், அல்டமஷ் என்பவரால் அழிக் கப்பட்ட உச்சயினியில் இருந்த மகா காள லிங்கம், உச்சயினியில் உள்ள அமரேசுவர லிங்கம், பூநீ சைல லிங்கம், நருமதைக் கரையிலுள்ள ஓங்கார நாதலிங்கம், வங்கத்திலுள்ள வைத்யநாதலிங்கம். * இது, 1954 டிசம்பரில் விருதுநகரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாக சமாச ஆண்டுவிழாவிற் பேசப் பட்டது.

1. சர் ஜான் மார்ஷல் முகவுரை, சிந்துவெளி நாகரிகம் நூல் 1, பக். 7. 2. K. R. Subramaniyam, The Madras University Journa], Vol. I, Part II. P. 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/70&oldid=678212" இலிருந்து மீள்விக்கப்பட்டது