பக்கம்:சைவ சமயம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 75

போன்ற சிறப்பு அடியார் உருவங்கள் பல கோவில் களில் எழுந்தருளப்பெற்றன. சுந்தரர் உருவச் சிலையோடு அவர் மனைவியர் உருவச் சிலைகளும், அவ்வாறே சிறுத்தொண்டர், அவர் மனைவியார், மக ஞர் உருவச் சிலைகளும் சில கோவில்களில் எழுந் தருளப்பெற்றன. சில செப்புத் திருமேனிகளுக்கு அடியில், "உலகாண்ட மூர்த்தி,” “தத்தா, நமரே காண் என்ற மிலாடுடையார்,' என்பன போன்ற சிறப்புத் தொடர்கள் குறிக்கப்பட்டன. நாயன்மார் ஓவியங்கள்

தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச் சுவரொன்றில் சுந்தரரைச் சிவபெருமான் தடுத் தாட்கொள்ளும் வரலாறும், சுந்தரர் யானைமீதும், சேரமான் குதிரை மீதும் கயிலை செல்லும் காட்சியும் அழகொழுகும் ஒவியங்களாகத் திகழ்கின்றன. சுந்தரரும் சேரமானும் தலைமுடியும் தாடியும் வைத் திருத்தல் பண்டைக்கால மயிரொப்பனையையும், அவர்கள் பலவகை அணிகளை அணிந்திருந்தமை அக்கால அணிவகைகளையும் நமக்கு நன்கு விளக்கு வனவாகும். நாயன்மார் சிற்பங்கள்

ஒவ்வொரு நாயனர் வரலாற்றிலும் உயிர் நாடி யாகவுள்ள நிகழ்ச்சியைச் சிற்பமாகக் குறிக்கும் வழக்கம் சோழர் காலத்தில் உண்டாயிற்று. மேலைக் கடம்பூர்ச் சிவன் கோவிற் கருவறையின் புறச்சுவர் களில் இத்தகைய சிற்பங்களைக் காணலாம். இரண் டாம் இராசராசன் கட்டிய இராசராசேச்சரத்தில் எல்லா அடியார் நிகழ்ச்சிகளையும் ஒருங்கே காண லாம். கண்ணப்பர் வரலாறு பற்றிய சிற்பங்கள் தஞ்சைப் பெரிய கோவில் நடு மண்டபச் சுவரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/74&oldid=678216" இலிருந்து மீள்விக்கப்பட்டது