பக்கம்:சைவ சமயம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கல்வெட்டுக்களும் சைவசமயமும்

பல காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன. சண்டீச நாயனர் சிவபெருமானுல் கொன்றை மாலை அணி விக்கப்பட்டுச் சண்டீசப் பதம் கொடுக்கப்பெற்ற காட்சியே அந்நாயனர் வரலாற்றில் சிறப்புப் பகுதி யாகும். இக்காட்சியை இராசேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழேச்சரத்தில் இன்றும் கண்டு களிக்கலாம். நாயன்மார் திரு மேனிகளும், அவர்தம் வரலாற்றுச் சிற்பங்களும் பொதுமக்கள் பார்வையிற் பட்டு அவர்களைச் சிவ நெறிச் செல்வர்களாக்க வேண்டும் என்பதே சோழ மன்னர்களின் விருப்பமாகும்: நாயன்மார் விழாக்கள்

செங்காட்டங்குடியில் சிறுத்தொண்ட நம்பி விழாவும், சீகாழியில் ஞானசம்பந்தர் விழாவும் திருவாரூரில் சுந்தரர் விழாவும் திருவதிகையில் திருநாவுக்கரசர் விழாவும், சிறப்பாக நடைபெற்றன. இவ்வாறே பல கோவில்களில் அவ்வத்தலத்து நாயனர் விழாக்கள் நன்கு நடைபெற்றன. அவை நன்கு நடைபெறக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன என்று பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பெருங் கோவில் விழாக் காலங்களில் திருத்தொண்டத் தொகை முதலிய பதிகங்களும், மார்கழித் திங்களில் திருவெம்பாவையும் ஒதப்பட்டு வந்தன. நாயன்மார் பெயர்கள்

சோழர் காலச் சைவ மக்கள் நாயன்மார் மீது அளவுகடந்த பற்றுக்கொண்டிருந்தனர் என்பதை அறிவிக்க, அவர்தம் பெயர்களைத் தம் பிள்ளைகட்கு வழங்கியதிலிருந்து அறியலாம். சிறுத்தொண்ட நம்பி, வெண்காட்டு நங்கை, பரவை நங்கையார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/75&oldid=678217" இலிருந்து மீள்விக்கப்பட்டது