பக்கம்:சைவ சமயம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கல்வெட்டுக்களும் சைவசமயமும்

தேவாரம் அழகியான், ஆண்டார் திருத்தொண் டத் தொகையான், திருமுறைத் தேவாரச் செல் வன், திருத்தொண்டத் தொகை நல்லூர், திருத் தொண்டத்தொகை மங்கலம் என்பன போன்ற பெயர்களைக் காண்க. -

திருமுறைகளை நன்கு படித்த பழக்கத்தால் அக்காலச் சைவ நன்மக்கள் நாயன்மார் பயன்படுத் திய சொற்ருெடர்களை மக்களுக்கும் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் பெயர்களாக வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறி யக்கிடக்கின்றது. அவற்றுள் சில கீழே காண்க :

(1) சிவாய நமவென்று நீறணிந்தேன்’ என் பது அப்பர் தேவாரம். "நீறணிந்தான் சேதிராயன்' என்பது ஒரு சிற்றரசன் பெயர். (2) நச்சுவார்க் கினியர் போலும் நாகையீச் சுவரனரே " என்பது அப்பர் வாக்கு. " நச்சிஞர்க் கினியன் தில்லையம்பல மூவேந்த வேளான்” என்பது ஓர் அரசியல் அலு வலன் பெயர். (3) “மழபாடி வயிரத்துணே என் றென்றே நான் அரற்றி” என்பது அப்பர்வாசகம். " ஆனைமங்கலமுடையான் பஞ்சநதி வயிரத்துரண்' என்பது ஒருவன் பெயர். (4) அரசாள்வர் ஆணை நமதே என்பது சம்பந்தர்வாக்கு."ஆணைநமதெ”ன்ற பெருமான் என்பது ஒருவன் பெயர். (5) 'பொன்னர் மேனியனே' என்பது சுந்தரர் சொற்ருெடர். "பொன்னர் மேனி விளாகம்” என்பது ஓரிடத்தின் பெயர். (6) கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் (கி. பி. 13-ஆம் நூற்ருண்டின் முற்பாதியில்) திருவெண் ணெய் நல்லூர்க் கோவிலில், பிச்சன் என்று பாடச் சொன்னன் ' என்ற பெயர் கொண்ட ஊது

கொம்புகள் இரண்டு இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/77&oldid=678219" இலிருந்து மீள்விக்கப்பட்டது