பக்கம்:சைவ சமயம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 79

சமய நூல் விளக்கம் - பல கோவில்களில் சைவசமய நூல்கள் படித் துப் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன. பாரதம், இராமாயணம், சிவதர்மம், திருஞானம், சோம சித்தாந்தம் என்பன பல கோவில்களில் பேசப்பட்டு வந்தன. ஆளுடைய நம்பி ரீபுராணம் (பெரிய புராணம்) திருவொற்றியூரில் படிக்கப்பட்டது. அத னைச் சோழன் இரண்டாம் இராசா திராசன் இருந்து கேட்டு மகிழ்ந்தான் என்று திருவொற்றியூர்க் கல் வெட்டுக் குறிக்கின்றது. திருநீடூரில் புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை ஒன்று முதற் குலோத்துங்கன் காலத்தில் இருந்ததாகத் தெரி கின்றது. ஆடலும் பாடலும்

கோவில்களில் சமயத் தொடர்பான ஆடல்களை யும் பாடல்களையும் நிகழ்த்த ஆடல் பாடல்களில் வல்ல மகளிர் அமர்த்தப்பட்டிருந்தனர் என்பதை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இராசராசசோழன் தஞ்சையில் கட்டிய பெரிய கோவிலில் மட்டும் 400 கலைவாணிகளை அமர்த்தி யிருந்தான். அவர்கள் தமிழகத்துப் பல்வேறு கோவில்களிலிருந்து வருவிக்கப்பட்டவர்கள். ஒவ் வொருத்திக்கும் ஒருவேலி நிலமும் ஒரு வீடும் வழங் கப்பட்டன. இவ்வாறு பல கோவில்களில் ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந்து சமயப் பணி யாற்றினர். இவருள் பதியிலார் ஒருவகையினர் : ரிஷபத் தளியிலார்' (சிவன் கோவிற் பெண்டுகள்) மற்ருெரு வகையினர்; திருவொற்றியூர்க்கோவிலில் சொக்கம், சந்திக்குணிப்பம் என்னும் நடன வகை களைப் பதியிலார் ஆடும்போது, ரிஷபத்தளியிலார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/78&oldid=678220" இலிருந்து மீள்விக்கப்பட்டது