பக்கம்:சைவ சமயம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கல்வெட்டுக்களும் சைவசமயமும்

மிழற்றுப் பாடலை வழங்கினர். ரிஷபத்தளியிலார் அகமார்க்கம், வரிக்கோலம் என்னும் நடன வகை களே நடித்துக் காட்டினர். பதியிலார் திருப்பதிகக் கருத்துகட்கும், திருவெம்பாவைக் கருத்துகட்கும் ஏற்றவாறு நடித்தனர் என்பது திருவொற்றியூர்க் கல்வெட்டால் தெரிகின்றது. இத்தகைய திருப் பதிகத்திற்கு ஏற்ற நடன வகைகள் இன்று இல்லா திருத்தல் வருந்தற்குரியது. தேவரடியார்

கோவில்களிலிருந்து தொண்டாற்றிய மாதர் களுள் தேவரடியார் ஒரு வகையினர். இவர்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுக்கிடல், திரு வமுதுக்குரிய அரிசியைத் துய்மை செய்தல், திருப் பதிகம் பாடல் முதலிய பணிகளைச் செய்துவந்தனர்; திருநீற்றுக் காப்புத்தட்டும் மலர்த்தட்டும் விழாக் களில் எந்தி வந்தனர்; விழாக் காலங்களில் அம்ம னுக்குக் கவரிவீசினர்; அச்செயலால், கவரிப்பிளு’ என்றும் அழைக்கப்பட்டனர். இங்ங்ணம் தேவ ரடியார் நிலையை அடைந்த பெண்கள் ஒரு குறிப் பிட்ட சாதியாரல்லர்; எல்லா இனத்து மகளிரும் இச் சைவப்பணியை மேற்கொண்டு சூல முத்திரை பொறிக்கப் பெற்றுத் தேவரடியார் என்னும் தகுதியைப் பெற்றுவந்தனர். அழகிய பாண்டிய பல்லவரையன் என்ற படைத்தலைவளுெருவன் தன் குடும்பப் பெண்களைத் தேவரடியார் ஆக்கினன் என்று திருவல்லம் கோவிற் கல்வெட்டுத் தெரிவித் தலை நோக்க, இவ்வுண்மை இனிது புலளுகின்றது. மடங்கள் -

பெளத்த மதத்திற்கும், சமண மதத்திற்கும் அச்சமயக் கோவில்களை அடுத்து மடங்கள் இருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/79&oldid=678221" இலிருந்து மீள்விக்கப்பட்டது