பக்கம்:சைவ சமயம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 81

ததுபோலவே, சைவ சமய வளர்ச்சிக்குக் கோவில் களை அடுத்தும், தனித்தும் தமிழகத்தில் பல மடங் கள் இருந்தன. அப்பர், சம்பந்தர் கால முதலே மடங்கள் சிவப்பணியைச் செய்துவந்தனவாயினும் சோழர் காலத்தில் மிகப் பல மடங்கள் தோன்றிச் சமயத் தொண்டினை நன்கு ஆற்றலாயின. திருவா வடுதுறையில் மட்டும் திருநீல விடங்கன் மடம், சிவ லோக நாயகன் மடம், சர்வதேவன் மடம், பஞ்சநதி வாணன் மடம், சங்கரதேவன் அறச்சாலை, பிர மாண வாசகன் மடம், நாற்பத்தெண்ணுயிரவன் மடம், முந்நூற்றிருபத்து நால்வன் மடம், பெருந் திருவாட்டி அறச்சாலை என்பன இருந்தன. இவ் வாறு பல பெருங் கோவில்களை அடுத்திருந்த மடங் களுக்குப் பக்கத்தில் ம்ருத்துவ மனைகளும் அமைப் புண்டிருந்தன.

இவற்றுள் காலாமுகச் சைவர்களின் மடங்கள் சில ; காபாலிகச் சைவர் மடங்கள் சில , வீர சைவ மடங்கள் மிகச்சில; வடநாட்டுக் கோளகி மடத்தைச் சேர்ந்த கிளை மடங்கள் சில வாரணுசிக் கொல்லா மடத்துக் கிளைகள் சில தமிழகத்து இருந்தன ; வார ணுசி பிகூடிா மடத்துக் கிளைமடங்கள் சிலவும் இருந் தன. இவை அனைத்திலும் மேற்சொன்ன பல வகைச் சமய நூல்கள் பொது மக்களுக்குப் படித்து விளக்கப்பட்டன. தமிழ்ச் சைவ மடங்கள்

மாளிகை மடத்து முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த மடங்கள் சில ; சண்பைக்குடி முதலியார் சந்தான மடங்கள் சில மருதப் பெருமாள் சந்தான மடங்கள் சில இச் சைவ மடத்துத் தலைவர்கள் சைவ சித்தாந்த சாத்திரங்களிலும், சைவத் திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/80&oldid=678222" இலிருந்து மீள்விக்கப்பட்டது