பக்கம்:சைவ சமயம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கல்வெட்டுக்களும் சைவசமயமும்

முறைகளிலும் சிறந்து விளங்கினர்; மக்களை நல் வழிப்படுத்தினர். இச் சைவ மடாதிபதிகளின் செல்வாக்குத் தமிழகத்தில் மிகுந்து பரவியது. தமிழகத்துச் சைவம் சாதிபேதமற்றது; அன்பே சிவம் என்ற கொள்கையால் அனைவரையும் ஒரு தாய் ஈன்ற மக்களாகக் கருதும் விரிந்த மனப் பான்மையுடையது. ஆதலால், பெரும்பாலரான் தமிழ் மக்கள் இச் சைவ மடத்துத் தலைவர்களின் அருளுரைகளில் பெரிதும் ஈடுபட்டனர். இச்சைவ மடங்களைப்பற்றி ஆராய்ச்சியாளர் பின்வருமாறு கூறுதல் காண்க. *

"...... இங்ங்னம் சோழப் பேரரசர் ஆதரவில் சைவ சமயம் படிப்படியாக வளர்ச்சியுற்றுக் கி. பி. 13 ஆம் நூற் ருண்டின் தொடக்கத்தில் பல மடங்களைத் தமிழ்நாடெங் கும் பெற்றிருந்தது. அந்த மடங்களின் தலைவர்களாக இருந்த சைவத் துறவிகள், பெரும்பாலான தமிழ் மக்களி டம் செல்வாக்குப் பெற்றிருந்தனர். புகழ் பெற்ற அத்வைத ஆசிரியரான சங்கராச்சாரியார் இதே தமிழகத் திலிருந்து ப்க்தி நெறியைப் பரப்பியவர். ஆனல், அவர் சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி மக்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்யவேண்டுமென்று வற்புறுத்தினர். இவ்வறிவுரைக்கு மாருகச் சைவ சமயம் காணப்பட்டது : சாதி வேறுபாட்டைக் கருதாது, எல்லா மக்களையும் பக்தி ஒன்றையே அடிப்படையாகக்கொண்டு, தன்பால் அணைத் துக்கொண்டது. இதனுல் வைதிகப் பிராமணர் சைவத் திற் கலக்கமுடியவில்லை; ஆயின், பிராமணரல்லாத வகுப்பாரனைவரும் சைவத்தைத் தழுவினர். இதன் பயனுக, முன் சொன்ன்வாறு சைவ மடங்கள் நாடெங்கும் விளங்கின. அவை, பிராமணரான திரு ஞானசம்பந்தர் பெயரைத் தாங்கியும் அப் பிராமணரான திருநாவுக்கரசர் பெயரைத் தாங்கியும் மிகப்பலவாக விளங்கின.”

米...., Saivism thus appears to have gradually grown stronger and stronger under the patronage of the eola kin3s so that in the beginninà of the 13th cen

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/81&oldid=678223" இலிருந்து மீள்விக்கப்பட்டது