பக்கம்:சைவ சமயம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கல்வெட்டுக்களும் சைவசமயமும்

கல்வியையும் சமயவொழுக்கத்தையும் பொதுமக்க வளிடையே வளர்த்தன. பிணியாளர்களும் இம் மடங்களில் மருந்து முதலியன பெற்றனர். குகைகள்

இப்பெயர் கொண்ட ஒருவகை மடங்கள் பிற் காலச் சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்றன. சீகாழி, சிதம்பரம், திருப்புகலூர் முதலிய பலவூர்க் கோவில்களில் இவையிருந்தன. இவை பாது காப்பு மிக்கவை; திருமுறைகளில் வல்ல சைவத் துறவிகளைத் தலைவர்களாகப் பெற்றவை. இத் தலைவர்தம் சீடர்கள் பல கோவில்களிலிருந்து திரு முறைகளை ஒதினர்கள். சில குகைகளில் தவசி கள், ஆண்டார்கள், யாத்திரீகர் முதலியோர் உண் பிக்கப்பட்டனர். இத்தகைய குகைகளாலும் முன் சொல்லப்பட்ட மடங்களாலும் சைவசமயம் நன்கு பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் உண்மையாகும். மக்கள் தொண்டே சமயத்தொண்டு

பெருங்கோவில்களில் பொதுமக்கள் நலனுக் காக நூல் நிலையம் இருந்து வந்தது. அதனைச் சரசுவதி பண்டாரம்' என வழங்கினர். சில பெரிய கோவில்களை அடுத்து மருத்துவமனைகள் இருந் தன. அவற்றுள் மருத்துவரும் (Physician), சல்லி யக்கிரியை பண்ணுவாரும் (Surgeon), தாதிமாரும் (Nurses), மருந்துப் பொருள்களைக் கொண்டு வருப வரும், மருந்துகளைச் செய்வோரும் இருந்தனர். நோயாளிகளுக்குப் படுக்கைகள் இருந்தன. ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுக் குடிமக்கள் தவிக்கும் போது, அவ்வூர்க் கோவிலில் உள்ள வெள்ளி, பொன் நகைகளையும் பாத்திரங்களையும் உருக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/83&oldid=678225" இலிருந்து மீள்விக்கப்பட்டது