பக்கம்:சைவ சமயம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சைவத் திருமுறைகள்-1 திருமந்திரம்

பன்னிரு திருமுறைகள்

திருஞான சம்பந்தர் பாடிய திருமுறைகள் மூன்று ; திருநாவுக்கரசர் பாடிய திருமுறைகள் மூன்று; சுந்தரர் பாடிய திருமுறை ஒன்று மணி வாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை; திருமாளிகைத் தேவர், சேந் தளுர், கருவூர்த்தேவர். பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணுட்டு அடிகள், திருவாலி அமுதனர், புருஷோத்தம நம்பி, சேதிராயர் என்ற ஒன்பது அடியார்கள் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. திருமந்திரம் பத்தாம் திருமுறை; சிவபிரான், காரைக்காலம்மை யார் முதலிய பன்னிருவர் பாடிய பாக்களின் தொகுதி பதினேராம் திருமுறையாகும். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையைப் பின்பற்றி யும், நம்பியாண்டர் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியைப் பின்பற்றியும் சேக்கிழார் பாடிய பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகும். சம்பந்தரும் அப்பரும் கி. பி. 7-ஆம் நூற்ருண் டினர் ஆதலால் முதல் ஆறு திருமுறைகள் கி. பி. 7-ஆம் நூற்ருண்டைச் சேர்ந்தவை. சுந்தரரும் மாணிக்கவாசகரும் கி. பி. 9-ஆம் நூற்ருண்டினர் ஆதலால் ஏழாம் திருமுறையும் எட்டாம் திருமுறை யும் ஒன்பதாம் நூற்ருண்டைச் சேர்ந்தவை.பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் கி. பி. 4, 5, 6 ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/85&oldid=678227" இலிருந்து மீள்விக்கப்பட்டது