பக்கம்:சைவ சமயம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 87

மூன்று நூற்ருண்டுகளில் ஒரு நூற்ருண்டைச் சேர்ந்தது. பதினேராம் திருமுறையிற் கண்ட காரைக்காலம்மையாரும் ஐயடிகளும் சம்பந்தர்க்கு முற்பட்டவர். கல்லாடர், கபிலதேவர், பரணதேவர் நக்கீரதேவர், சேரமான் பெருமாள் நாயனர் எபன்வர் கி. பி. 9-ஆம் நூற்ருண்டுக்குட்பட்டவர். நம்பியாண்டார் நம்பி முதலாம் இராசராசன் காலத் தவர். பட்டினத்தடிகள் கி. பி. 10-ஆம் நூற்ருண் டினர். ஒன்பதாம் திருமுறை பாடிய கருவூர்த்தேவர் முதலியோர் சோழர் (கி. பி. 900-1200) காலத்தவர்.

திருமங்திரம்

திருமந்திரம் சைவத் திருமுறைகளில் காலத் தால் முற்பட்டது. இதனைச் செய்த திருமூலர் கேதாரம், நேபாளம், காசி, விந்தம், பூரீசைலம் இவற்றைத் தரிசித்துக்கொண்டு தென்னுடுவந்தவர். வடமொழி ஆகமங்களின் சத்துப்பொருளைத் தமி ழில் பாடவேண்டும் என்ற கருத்தினுல் மூவிாயிரம் செய்யுட்களைக் கொண்ட திருமந்திரம் என்னும் நூலைச் செய்தனரென்று சேக்கிழார் கூறுகின் ருர். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ் வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப்படும். திருமந் திரம் திருமூலர் காலத்திலிருந்த சைவசமய நிலையை உணரத் துணைபுரிவதாகும்.

(1) முதல் தந்திரத்தில் யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, கொல் லாமை, புலால் உண்ணுமை, காம அடக்கம், அந் தணர் ஒழுக்கம், அரசன் கடமை, அறஞ் செய்த லின் சிறப்பு, அன்பை வளர்த்தல், பிறர்க்கு உதவி செய்தல், கற்றவரிடமிருந்தும் நூல்களிலிருந்தும் அறிவை வளர்த்தல், மனத்தை விருப்பு வெறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/86&oldid=678228" இலிருந்து மீள்விக்கப்பட்டது