பக்கம்:சைவ சமயம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சைவத் திருமுறைகள் - 1

புக்களிற் செல்லவிடாமை முதலிய அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. -

(2) இரண்டாம் தந்திரத்தில் அகத்தியர் தென் ளுடு போந்தது, சிவனுடைய எட்டு வீரச் செயல் கள், லிங்கத்தின் தோற்றம், தக்கனது யாகம், பிரளயம் பற்றிய புராணக் கதைகள் முதலியன குறிக்கப்பட்டுள்ளன. படைத்தல், காத்தல், அழித் தல், மறைத்தல், அருளல் என்னும் சிவனுடைய ஐந்தொழில்களும், சிவன் சக்தி விளையாட்டால் உண்டான உயிர்களைப் பற்றிய விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. சிவ நிந்தை, அடியார் நிந்தை கூடாதென்பதும், கோவில்களை அழிப்பது தீதென்பதும், பொறையுடைமை, பெரியாரைத் துணைக்கோடல் முதலியனவும் பேசப்பட்டுள்ளன. (3) மூன்ரும் தந்திரம் முழுவதும் யோகத்தைப் பற்றியது. இயமம், நியமம், ஆசனம், பிராணுயாமம், பிரத்தியாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் எண்வகை யோகமுறைகளும் அவற்ருல் அடையும் பயன்களும் விளக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப்பின் உடலை வெல்லுதல் முதலிய யோகநிலைச் செய்திகள் கூறப்பட்டுள்ளன.

(4) நான்காம் தந்திரம் மந்திர சாதனம் பற்றி யது. இப்பகுதியில் அஜபா மந்திரம், பைரவி மந்திரம் முதலியன கூறப்பட்டுள்ளன. திருஅம் பல சக்கரம், திரிபுர சக்கரம், ஏரொளிச் சக்கரம், பைரவச் சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், புவளுபதி சக்கரம், நவாகூடிரி சக்கரம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

(5) ஐந்தாம் தந்திரத்தில் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ்சுத்த சைவம் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/87&oldid=678229" இலிருந்து மீள்விக்கப்பட்டது