பக்கம்:சைவ சமயம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 89

பவை பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. பின்பு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன குறிக் கப்பட்டுள்ளன; பின்னர்ச் சன்மார்க்கமும் அதன் பிரிவுகளான சகமார்க்கம் (கடவுளை நண்பனுகக் கருதி நடத்தல்), சத்புத்ர மார்க்கம் (கடவுளுக்கு மகளுக நடத்தல்), தாசமார்க்கம் (கடவுளை ஆண்டா கைக் கருதி நடத்தல்) என்பனவும் விளக்கப்ாட் டுள்ளன. அடுத்து, சாலோகம் (இறை உலகில் வசித்தல்), சாமீப்யம் (கடவுளுக்கு அண்மையில் வசித்தல், சாரூப்யம் (இறையோடு சமநிலை அடை தல்), சாயுச்யம் (இறையோடு கலத்தல்) என்பன குறிக்கப்பட்டுள. கடவுள் சக்தி-மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்னும் நான்கு முறைகளில் இறங்குதல் கூறப்பட்டுள்ளது. சைவத்திற்குப் புறம்பான சமயங்கள் கண்டிக்கப்பட்டுள்ளன, உட்சமயங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

(6) ஆரும் தந்திரத்தில் உயிர் நாடியாக உள் ளவை சிவகுரு தரிசனம், அவனது திருவடிப்பேறு, ஞானத்தின் பொருள், தெரிபவன்-தெரியபட்ட பொருள், துறவு, தவம், அருளிலிருந்து தோன்றும் அறிவு, பக்திக்குப் பக்குவமுடையவர் இலக்கணம், பக்குவம் அடையாதார் இலக்கணம், திருநீற்றின் பொருள் என்பவையாகும்.

(1) ஏழாம் தந்திரத்தில் ஆறு ஆதாரங்கள், அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவ லிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம், சிவலிங்கம் என்னும் ஆறு லிங்கங்கள், சமயச் சிறப்புப் போதனை, ஆத் மாவில் உள்ள சிவனுக்கேற்ற வழிபாடு, குருவாகிய சிவனுக்கேற்ற வழிபாடு, மகேசுவர பூசை (அடி யார்க்கு உணவளித்தல்), அடியார் பெருமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/88&oldid=678230" இலிருந்து மீள்விக்கப்பட்டது