பக்கம்:சைவ சமயம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 91

ஊழ், சிவனைக் கண்டு அவனது உண்மை உருவை உணர்தல், சமாதி நிலை அடைதல் முதலியன குறிக் கப்பட்டுள்ளன. இறைவனைப் பற்றிய வழிபாட்டுப் பாடல்களுடன் இந்நூல் முடிவுபெறுகின்றது.

திருமூலர் நியாயம், வைசேவிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம் என வேதங்களி லிருந்து கிளைத்தஆறு உட்பிரிவுகளைக் கூறுகின்ருர். அறுவன்கச் சித்தாந்தம்

பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், பைரவம், சைவம் என்பன சைவத்தின் உட்பிரிவு களாகும.

(1) பாசுபதம் : ஆன்மாக்களுக்கு ஆணவ மலம் இல்லை; மாயை கன்மம். என்ற இரண்டால் பந்த முற்று இன்ப துன்பங்களே நுகரும். இவற்றில் வெறுப்புற்றுச் சாத்திர முறையால் தீட்சை பெற்ற வனிடம் இறை அறிவு பற்றும். அப்பொழுது இறைவன் தன் குணங்களை அவன்பால் பற்றுவித் துத் தன் அதிகாரத்திலிருந்து ஒய்வுபெறுவான். இது பாசுபதர் கொள்கை. பாசுபதன் தன் உடம் பில் சாம்பலையும் களிமண்ணையும் பூசுவன்; கறுப்பு உடைகளை அணிவன்; தலையை முடியிட்டுக் கொள் வன்; முடியிடாமலும் விடுவன். பாசுபதர் இதிகாச காலமுதலே நாட்டில் இருப்பவர்; பசுபதி வழிபாட் டினர்; லிங்க வழிபாட்டினர்; சிவனுடன் கணங்களை யும் பேய்களையும் இணைத்து வழிபடுவர்; சாதி வேறு பாடற்றவர்; செபம், தவம் இவற்றில் ஈடுபட்டவர்; முகம், கைகள், மார்பு, கொப்பூழ் இவற்றில் லிங்க முத்திரை பதிப்பவர். சிவன் யோக ஆசாரியனுக வந்து ருரு, ததீசி, அகத்தியன், உபமன்யு என்ற நால்வர்க்கும் பாசுபத ஞானத்தை உபதேசித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/90&oldid=678232" இலிருந்து மீள்விக்கப்பட்டது