பக்கம்:சைவ சமயம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சைவத் திருமுறைகள் - 1

அவர்கள் பாசுபத ஞானத்தைப் பலர்க்கும் உபதே சித்தனர் என்பது பாசுபதர் நம்பிக்கை, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன இச்சைவத்தில் வற்புறுத்தப்படுகின்றன.

.ே மாவிரதம்: பாசுபதக்கொள்கையில் கூறப் பட்ட ஆன்மாக்கள் பந்தமுற்று இன்பதுன்பங்களை நுகரும், சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள முறையில் தீட்சை பெற்று எலும்பு மாலை அணிதல் முதலிய சரியைகளில் வழுவாது ஒழுகுபவர் முத்தராவர். முத்தருக்குச் சிவைேடு சமமாக எல்லாக் குணங்க ளும் உற்பத்தியாகும். இது மாவிரதியர் கொள்கை. இவர்கள் நெற்றியில் மூன்று கீற்றுக்களாக விபூதி அணிவர்; உடல் முழுவதும் நீறு பூசுவர்; தலைமயி ரின் உச்சியில் எலும்பு மணிகள் கட்டியிருப்பர்; காதில் எலும்பு மணிகளைக் குண்டலங்களாக அணிவர்; கழுத்தில் எலும்பு மணித் தாழ்வடம் அணிவர்; முன்கையில் எலும்பு மணி கோத்த கயிறு கட்டுவர்; தோளில் யோகப் பட்டிகையும், கறுப்பு மயிர்க் கற்றையாலான பூணுாலும் அணிவர்; கோவணம் தரிப்பர் ; அதன்மேல் அசைந்தாடும் சிறிய உடையைத் தரிப்பர் மண்டை ஒட்டில் உணவு கொள்வர். சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுவதும் பூசுவர். இவருள் ஒரு பிரிவினர் "காளா முகர்” என்றும் கூறப்படுவர்.

3. காபாலம்: ஆன்மாக்களின் இயல்பு, பந்த இயல்பு மாவிரதியர் கொண்டவாறே காபாலிகளும் கொண்டுள்ளனர். சாத்திர முறைப்படி தீட்சை பெற்றுப் பச்சைக்கொடி ஒன்றைக் கையில் ஏந்தி நாள்தோறும் மனிதர் தலையோட்டில் ஐயம் ஏற்று உண்பவர், முத்தராய்ச் சிவன் ஆவேசித்தலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/91&oldid=678233" இலிருந்து மீள்விக்கப்பட்டது