பக்கம்:சைவ சமயம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 93

எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமயமாவர் என்பது காபாலிகர் கொள்கை, காபாலிகம், பாசு பதம்போலப் பழைமையானது. காபா லிகர் சிவனைக் கொடிய பைரவ வடிவில் வணங்குவர்; உடம்பில் பினச்சாம்பல் பூசுவர்; தலையில் சடை உடையவர்; தலை மாலை அணிபவர்; புலித் தோலாலான கோவ ணத்தை உடுப்பர்; இடக்கையில் கபாலம் ஏந்தி யிருப்பர். வலக்கையில் மணி ஒன்று பிடித்திருப்பர். இக்காபாலிகர் நரபலியில் ஈடுபட்டவர். . சிறுத் தொண்டர் இப்பிரிவைச் சேர்ந்தவர் ஆதலால் பைரவ வேடத்தில் வந்த அடியவருக்குத் தம் மைந்தனை அறுத்துக் கறி சமைத்துப் படைத்தார் என்பது இங்கு அறியத்தக்கது.

4. வாமம்-உலகம் சக்தி மயமானது. வாம நூலில் விதித்த முறைப்படி ஒழுகிச் சக்தியில் லயித்தலே முக்தி என்பது சக்தி வழிபாட்டினர் கொள்கை. இவ்வழிபாட்டினர் சாக்தர்' எனப் படுவர். மிகப்பழைய காலத்தில் தோன்றிய தாய் வழிபாட்டின் வளர்ச்சியே வாமம்’ அல்லது ‘சாக்தேயம்' என்பது.

5. பைரவம்-பெரும்பாலும் வாமமதத்தோடு ஒத்துச் சிறுபான்மை ஆசாரங்களில் வேறுபட்டுப் பைரவனே பரம்பொருள் என்று நம்பி, பைரவ மதத்தில் சேருவதே முக்தி அளிக்கும் என்பது இச் சமயத்தினர் கோட்பாடு.

6. சைவம்-சிவனையே முழுமுதற் கடவுளா கக்கொண்டு சரியை முதலிய நான்கினலும் அவனை அடையப் பாடுபடும் சமயமே சைவம். பதி-பசுபாசம் என்னும் மூன்றையும் ஒப்புக்கொண்டு ஆகம வழிப்படி நடப்பவர் "மாகேசுவரர்' எனப்படுவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/92&oldid=678234" இலிருந்து மீள்விக்கப்பட்டது