பக்கம்:சைவ சமயம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சைவத் திருமுறைகள் - 1

வீரசைவம்-வீரசைவர் அல்லது வீரமாகேசு வரர் அல்லது லிங்காயத்துகள் என்பவர் சிவனை மட்டுமே லிங்க வடிவில் வழிபடுவர். பக்தி நெறி யைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ்க்கை நடத்தி லிங்கத்தை வழிபடுவோர் துறக்கம் அடைவர் என் பது வீரசைவர் நம்பிக்கை. இவர்கள் வடமொழி வேதங்களை ஒப்புக்கொள்ளாதவர்; சாதி வேறுபாடு இல்லாதவர்; குழந்தை மனம் செய்யாதவர்; கைம் பெண் மறுமணம் செய்பவர்; புலாலையும் குடியையும் ஒழித்தவர் ; இறந்தாரைப் புதைப்பவர்; லிங்கத் தைப் போலக் குல்லாய் தைத்துத் தலையில் அணிப வரும் இவரும் சிலராவர். வீர ஆகமம், வாதுள ஆகமம் என்னும் இரண்டே இவர்தம் மதிப்புக்குரி யவை. திருமூலர் இ வ் வி ரு ஆகமங்களையும் பாராட்டியுள்ளார். எனவே, திருமூலர் காலத்தில் வீரசைவம் நாட்டில் இருந்தது என்பது நன்கு தெரிகிறது அன்ருே ? சைவத்தின் நான்கு பிரிவுகள்

திருமூலர் காலத்துச் சைவம் (1) சுத்த சைவம், (2) அசுத்த சைவம், (3) மார்க்க சைவம், (4) கடுஞ் சுத்த சைவம் என நால்வகைப்பட்டது. இப்பிரிவு பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திரங்களில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

1. சுத்த சைவர் பதி-பசு-பாசம் என்பவற் றின் வேறுபாடுகளை உணர்ந்தவர்; சித் என்னும் அறிவை, அசித் என்னும் அவித்தையால் கெடா மற் பார்ப்பவர்; தூய மாயையுடன் அசுத்த மாயை யைக் கலக்க விடாதவர். வேதத்திலிருந்து தோன் றிய சித்தாந்தமே சுத்தசைவ சித்தாந்தம் என்பது திருமூலர் கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/93&oldid=678235" இலிருந்து மீள்விக்கப்பட்டது