பக்கம்:சைவ சமயம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சைவத் திருமுறைகள் -1

இந்நால்வருள் அசுத்த சைவர் வேதாந்தத் துடன் கூடிய சித்தாந்தத்தை அறியாதவர். வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தம் சாதாரண சைவர் உபாயம் என்று திருமூலர் கூறுகிருர். கடுஞ் சுத்த சைவர் எல்லாம் கடந்தவர். எனவே, சுத்த சைவரும் மார்க்க சைவருமே வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தத்தை அறிந்தவர் என்பதும், வேதாந்தத்துடன் கூடிய சைவ சித்தாந்தமே சுத்த சைவம்' என்பதும் திருமூலர் கருத்தாதல் காண்க, சன்மார்க்கம் முதலிய நான்கு

சன்மார்க்கம்-சிவன் திருவடிகளைக் காணுதல், தொழுதல், நினைதல், தொடுதல், புகழ்தல், தலை யிலே சூடுதல், இவற்றைச் செய்பவர் முத்தி 组LGöD出一分j的”,

சகமார்க்கம்-என்பது இறைவனையே நண்ப ளுகக் கொண்டு வழிபட்டு முக்தியடையும் வழி. சுந்தரர் பின்பற்றிய நெறி இதுவே.

சத்புத்ரமார்க்கம்-என்பது சிவனைத் தந்தை யாகவும் அடியவன் தன்னைப் பிள்ளையாகவும், கொண்டு வழிபடுவது. சிவனைப் பூசித்தல், தோத் திரப் பாராயணம் செய்தல், போற்றுதல், செபித் தல், உருவ வழிபாடு செய்தல் முதலியன இத் துற்ைக்கு உரியவை. சம்பந்தர் பின்பற்றிய நெறி இதுவேயாகும்.

தாசமார்க்கம்-என்பது சிவனைத் தலைவனுக வும் தன்னை அடிமையாகவும் கொண்டு வழிபட்டு முக்தி யடைதல். விளக்கேற்றல், மலர் கொய்தல், அலகிடல், மெழுகுதல், மணியடித்தல், அபிடேக நீரைக் கொணர்தல் முதலிய கோவில் தொழில்கள் இத் துறைக்கு உரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/95&oldid=678237" இலிருந்து மீள்விக்கப்பட்டது