பக்கம்:சைவ சமயம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சைவத் திருமுறைகள் - I

வந்த சீடர்கள் மூலன் மரபினர்' எனப்பட்டனர். அவர்கள் பல நூற்ருண்டுகள் தமிழ் நாட்டில் இருந்து வந்தனர். அவருள் ஒருவரே, கி. பி. 17-ஆம் நூற்ருண்டினரான தாயுமானவர்க்குக் குருவாக இருந்தவர். இதனை, "மந்த்ரகுரு வேயோக தந்த்குரு வேமூலன்

மாபில் வரு மெளன குருவே!" என்னும் அவர் பாடலைக் கொண்டு அறியலாம். திருச்சிராப்பள்ளி மலைமீது உள்ள மெளன குரு மடம் இந்த மெளன குருவுடன் தொடர்புடையது ஆகும், - சைவப் பிரசாரம்

திருமூலர் தமது நூலில் சைவ சமயத்தின் சிறப்பை விளக்கியதுடன் நில்லாது. சமயப் பிரசா ரம் செய்திருப்பதும் காணலாம். ‘சிவனுக்கு நிக ராகும் தெய்வம் வேறில்லை, அவன் பிறப்பு அற்ற வன்; பேரருளாளன், யாவர்க்கும் இன்பம் அருள் வான்; அவனைத் தொழுங்கள்; ஞானம் பெறலாம்; அவனை எந்த வகையிலும் ஏத்தலாம். அவன் அருள் புரிவான். காரைக்கால் அம்மையாரும் பரண தேவரும் கையாண்ட முறைப்படியே திரு மூலரும் தம் பெயரையும், நூல் படிப்பதால் அடை யும் பயனையும் குறித்துள்ளார். இக்குறிப்புப் பல ரையும் பயன் கருதிப் படிக்கத் தூண்டவல்லது.

திருமந்திரச் சிறப்பு

ஆகமாந்தம் அல்லது சைவ சித்தாந்த சாத் திரங்கள் என்பன சுமார் கி. பி. 4 அல்லது 5-ஆம் நூற்ருண்டில் சிறப்புற்றன என்னலாம். குப்தர் கள் காலத்தில் கோதாவரியாற்றங்கரையில் மந்த்ர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/97&oldid=678239" இலிருந்து மீள்விக்கப்பட்டது