பக்கம்:சைவ சமயம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 99

காளேசுவர் என்ற இடத்தில் மந்த்ரகாளேசுவர் கோவிலைச்சுற்றி நான்கு சைவ மடங்கள் இருந் தன. அங்கு ஆகமச் சைவர்கள் இருந்தார்கள். இந்த 4, 5, 6-ஆம் நூற்ருண்டுகளில் திருமூலர் ஒரு நூற்ருண்டைச் சேர்ந்தவராதல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டது. திருமூலருக்கு முன் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சைவ சித்தாந்த நூல் இல்லை, அவர் செய்த திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் நூல் என்பது தெளிவு. ஆதலின் இந்நூல் பின் வந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் முத லிய சமயாசாரியர்கட்கும் அவர்களால் பரப்பப் பட்ட சைவ சமயத்திற்கும் ஆதார நூலாயிற்று. அவர்கள் திருமந்திரத்தை நன்கு படித்தவர்கள் என் பதற்குரிய சான்றுகள் பல காட்டலாம்.இடம் போதா மையால், சில சான்றுகள் இங்குத் தருவோம்.

1. (1) 'குருவே சிவ்மெனக் கூறினன் நந்தி”

-திருமந்திரம், (2) ஒருவ ராயிரு மூவரு மாயவன்

குருவ தாய குழகன்' -அப்பர் தேவாரம்

2. (1) " சாத்திர மோதும் சதுர்களை விட்டுநீர்

மாத்திரைப் போது மறித்துள்ளே - நோக்குமின் பார்த்தஇப் பார்வை பசுமரத் தானிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே".

-திருமந்திரம் இதே அறிவுரையை அப்பர் கூறுதல் காண்க: (2) சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்தி ரமுங்கு லமுங்கொண்

டென்செய்வீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/98&oldid=678240" இலிருந்து மீள்விக்கப்பட்டது