உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சைவ சமய சாரம்

பொய்வந் துழலும் சமயநெறி
புகுத வேண்டா முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச்
சோ வாருஞ் செகத்தீரே.

எல்லாச் சமயங்கட்குந் தாயகமாயுள்ள சைவ சமயத்தை நிலை நிறுத்த இத்தமிழ் நாட்டிற்றோன்றிய சமயாசாரியராகிய நால்வரும் சமரச உண்மை யையே உலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். அப்பெருமக்கள் அருளிச்செய்துள்ள தமிழ் வேதத்தை முறையாகப் பொருளுணர்ந்து ஒது வோர்க்குச் சமரச உண்மையே புலனாகும். தமிழ் வேதத்தில் சமரச உரைகள் பலபடக் கிடக்கின் றன. அவைகளுள் சில வருமாறு :–

வாது செய்து மயங்கு மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதே வனலால் தேவர்மற் றீல்லையே.

விரிவிலா அறிவி னார்கள் வேறெரு சமயஞ் செய்தே
எரிவினுற் சொன்னு ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்திஉய்யும் வகைய துவினைக்கின்றேனே.

ஆறென் றீயசம யங்களி னவ்வவர்க் கப்பொருள்கள்
வேறென் றிலாதன விண்ணோர் மதிப்பன மிக்குமவன்
மாறொன் றிலாதன மண்ணொடுவிண்ணக மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப ரான்தன் இணையடியே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமய_சாரம்_1944.pdf/8&oldid=1628383" இலிருந்து மீள்விக்கப்பட்டது