உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு

9

போற்றுந்தகையனபொல்லா முயலகன் கோபப்புன்மைகே
ஆற்றுந் தகையன ஆறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்
ஏற்றுந் தகையன இன்னம்ப ரான்றன் இணையடியே

-அப்பர்

அன்பு

சைவத்தை அன்பு சமயம் என்றுங் கூறலாம். சமரச சமயத்தில் அன்பே ஒழுகுதல்வேண்டும். சைவம், சமரச சமயம் என்பதற்கு அறிகுறி, அஃது அன்புமயமாகப் பொலிவதுமாகும். சைவம் - சிவசம்பந்தம். சிவம் - அன்பு. சிவ சம்பந்தம் - அன்பு சம்பந்தம். 'அன்பே சிவம்' என்பதற்கு ஆன்றோர் உரைகள் வருமாறு:–

அன்புஞ் சிவமுமிரண் டென்ப ரறிவிலார்
அன்பே சிவமான தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே

திருழலர்

மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊன் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடை அன்பே

–மாணிக்கவாசகர்

சைவம் அன்பை அறிவுறுத்தலால், அச்சமயத்தை அவலம்பித்து ஒழுகுவோர், சாதி பேதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமய_சாரம்_1944.pdf/9&oldid=1628385" இலிருந்து மீள்விக்கப்பட்டது