பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சோழர்காலச் சைவசமயம் (கி.பி. 900-1300)

சிவன் கோயில்கள்

சோழர்கால இந்தியாவில் சைவசமயம்

காஷ்மீரம்-நேபாளம்:சோழர்கள் பேரரசை ஏற்படுத்தி ஆண்ட நானூறு ஆண்டுக் காலமும் (கி.பி. 900-1300) இந்தியா முழுவதும் சைவசமயம் நன்கு வளர்ந்த காலமாகும். கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முடியக் காஷ்மீரில் சுமார் 70 சிவன் கோயில்கள் தோன்றி வளர்ச்சிபெற்றன. கோயில்களை அடுத்து மடங்களும் தோன்றி வளர்ந்தன. நேபாள நாடு அசோகர்க்கு முன்பிருந்தே பெரிய சைவமடம் பெற்ற நாடாக இருந்தது. அங்குள்ள பசுபதி கோயிலும் அதனைச் சார்ந்த பெரியமடமும் ஆசாரியர் பலரைத் தோற்றுவித்தன. அவருள் ஒருவரே ஏறத்தாழக் கி.பி. 1300-இல் வாழ்ந்த சண்டேசுவரர் என்பவர்.அவர் கிருத்திய ரத்நாகரம், கிருத்திய சிந்தாமணி என்ற சைவ நூல்களைச் செய்தவர்." . y

சாளுக்கியர் : கூர்ச்சரம், கத்தியவார் இவற்றையும் இவற்றைச் சுற்றியுள்ள பகுதியையும் ஆண்ட சாளுக்கியர் (கி.பி. 900-1300) சிறந்த சிவபக்தர்களாக இருந்தார்கள். உலகப்புகழ்பெற்ற சோமநாதபுரம் கோயில், ஜயசிம்ம சித்த ராஜன் கட்டிய சித்தேசுவரம், மண்டளிநகரில் மூலராஜன்கட்டிய மூலேசுவரம், ஜயசிம்மன் கட்டிய ருத்ர-மஹாகாளம் என்பன சிறந்த சிவத்தலங்களாக விளங்கின.சாளுக்கிய மன்னர்லகுலீச பாசுபத ஆசாரியர்களைத் தாங்கள் கட்டிய மடங்களில் தலைவர்களாக வைத்தனர். அவர்களிடம் தீட்சைபெற்றுத் தங்களைப் பரம மாஹேசுவரர் என்று கூறிக்கொண்டனர். தங்கள் கல்வெட்டுத் தொடக்கத்தில் "ஓம் நமசிவாய" என்று எழுதினர். இவர்கள் ஆட்சியில் லகுலீசர் தோன்றிய காரோணநகரும் அவர் சமயத்தவரான லகுலீச பாசுபதரும் சிறப்புற்றனர். х • ,

பரமார் : கூர்ச்சரம், மாளவம், இராஜபுதனம் இவற்றை ஆண்ட பரமார (கி.பி 800-1300) அரசருட் பெரும்பாலர் சைவர். அவர்கள் நாட்டைச் சேர்ந்த நருமதையாற்றில் உள்ள மந்ததா என்னும் தீவில்