பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ~ 131

குலோத்துங்கன் II: இவன் விக்கிரம சோழனால் தொடங்கப்பெற்ற தில்லைப் திருப்பணிகளை முடித்தான்; மேலும் பல திருப்பணிகள் செய்தான்; எழுநிலைக் கோபுரங்களை அமைத்தான். அம்மனுக்குத்திருமாளிகை அமைத்தான். சிறப்பாகப்பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான். இவன் நடராசர் பாததாமரையில் உள்ள தேனைப் பருகும் வண்டு என்று கல்வெட்டுக் கூறுகிறது. இவன் தில்லைத் திருமுன்றிலில் இருந்த பெருமாள் சிலையை அப்புறப் படுத்திவிட்டான். இவன் திருவாரூர்க் கோவிலில் இருந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் படிமங்கட்குப் பூசை நடக்கத் தானம் அளித்தவன்.” இவன் அநபாயன் என்ற சிறப்புப்பெயர் கொண்டவன்; ஒட்டக்கூத்தர் மாணவன்; அவரால் உலாவும் பிள்ளைத் தமிழும் பாடப்பெற்றவன். சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடச்செய்தபெருந்தகை இவனே." - - - -

இராசராசன் 11: இவன் கட்டியதே சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தாராசுரத்து ஐராவதேசுவரர் கோயில். 'இராஜராஜபுரத்து - இராஜராஜேசுவரம் என்பது அதன் பழைய பெயர். இவனும் ஒட்டக்கூத்தர்மாணவன் அவரால் உலாவிலும்தக்கயாகப்பரணியிலும் பாராட்டப் பெற்றவன். z: , - -

குலோத்துங்கன் III: இவன் திருவிடைமருதூர்க்கருகில் திரிபுவனவீரேசுவரம் என்ற பெரிய சிவன் கோயிலைக் கட்டினவன்; தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவ்ற்றைக் கட்டினவன் அல்லது பழுது பார்த்தவன்; காஞ்சி ஏகாம்பரர் கோயில், மதுரைச் சிவன் கோயில், திருவிடைமருதூர்க் கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேசுவரர் கோயில், திருவாரூர்ப்பூங்கோயில் இவற்றில் திருப்பணிகள் செய்தவன்.'நம் தோழன் திரிபுவனவீரதேவன் என்று இவனைச் சிவபிரான் குறிப்பிட்டதாகத் திருவாரூர்க் கல்வெட்டுக் கூறுகிறது.’ இவன் காலத்திலும் இவன் பின்னவர் காலங்களிலும் திருமுறைகள் பாதுகாக்கக் குகைகளும், சைவ சமயப் பிரசாரத்திற் காகவும் சமயப்பணிகட்காகவும் மடங்களும் நாட்டிற் பெருகின.

அரச மாதேவியரும் திருப்பணிகளும் : ஆதித்த சோழன் தொடங்கிய சைவத் திருப்பணிகள் அவன் பின்னவர் தொடர்ந்து வளர்த்தவாறே, ஆதித்தன் மனைவி தொடங்கிய திருப்பணிகள் பின்வந்த சோழ மாதேவியர் தொடர்ந்து செய்யலாயினர். அவருள் ஒரு சிலர் பெயர்களும் திருப்பணி பெற்ற கோயிற் பெயர்களும் கீழே காண்க:- -