பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ச. சோழர்காலச் சைவ சமயம்

இராசேந்திரன், திருச்சி உடையார்பாளையம் தாலுகாவில் பெரிய நகரம் ஒன்றை நிறுவினான்; அந்நகரத்தில் தஞ்சைப் பெரிய கோயிலைப்போலப் பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கைகொண்ட சோழேச்சுரம் என்பது. அஃது அமைப்பிலும் அழகிலும் வேலைப்பாட்டிலும் தஞ்சைப் பெரிய கோயிலை ஒத்திருப்பது அக்கோயில் முதல் இராசேந்திரன்காலமுதல்சோழராட்சி வீழ்ச்சியுறும்வரை மிகச்சிறந்தநிலையில் இருந்தது." .

இராசேந்திரன் மூத்த மகனான இராசாதிராசன் மன்னார் குடியில் ஜயங்கொண்ட சோமேசுவரத்தையும் இராஜரிஐேசுவரத்தையும் கட்டினான்; குடந்தைக் காரோணம் கின்ற கோயிலைப்புதுப்பித்தான்.'

முதற் குலோத்துங்கன் : இவன் திருநீற்றுச் சோழன் எனவும் பரம மகேசுவரன்' எனவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படலால் தீட்சைபெற்ற சைவன் என்பதும் சிறந்த பக்திமான் என்பதும் அறியலாம். இவன் காலமுதல் வேங்கிநாட்டுத் திராக்ஷாராமம் - பீமேசுவரர் கோயில் சிறப்படையத் தொடங்கியது." கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ள சூரியனார் கோயில் இவன் காலத்திற்கட்டப்பட்டது. இவன் கன்னோசியை ஆண்டகாஹத்வாலர் நட்புடையவனாதலின், அவர்கள் வழிபட்ட சூரியனையும் இவன் தன் நாட்டிற்கோவில்கட்டி வழிபட ஏற்பாடு செய்தான்" குலோத்துங்கன் தில்லையில் கூத்தப்பெருமான் ஊர்வலத்தைச் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தான் என்பது தில்லையுலா என்னும் நூலால் நன்கு தெரிகிறது. சமயகுரவர் நால்வர் தேர்கள் முன் சென்றன. சேரமான் பெருமாள், வரகுணப்ாண்டியன் இவர்கள் சேவிப்பச் சிவன் உலாப்போனான். அனைவர்க்கும் முன்பாகக் குலோத்துங்கன் குதிரைமீது சென்றான். தில்லைச் சிற்றம்பலம் நமசிவாய என்னும் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டபொன்னோடுகள் போடப்பெற்றதாம்: விக்கிரம சோழன் : இவன் தில்லைக் கோயிலுக்குப் பெருஞ் சிறப்புச் செய்தான்; தன் சிற்றரசர் கொணர்ந்த திறைப் பொருளின் பெரும்பகுதியை அக்கோயிலைப் புதுப்பிக்கவும் பெரிதாக்கவும். செலவிட்டான்; பொன்னம்பலம் சூழ் திருமாளிகை, கோபுரவாசல், கூடசாலைகள், பலிபீடம், தேர் இவற்றைப் பொன் வேய்ந்தான் தன் பெயரால் திருவிக்கிரமன் திருவீதி'யும் மாளிகையும் அமைத்தான்; நடராசர் உலாப்போகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தான். பல பொன் தட்டுகள்செய்தளித்தான். இவன் ஒட்டக்கூத்தன்மாணவன் அவரால் உலாக் கொண்டவன். -