பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 రకౌ சோழர்காலச் சைவ சமயம்

கோயில்களின் வளர்ச்சி

பல்லவர்களைப் பின்பற்றி ஆதித்தனும் அவன்மரபினரும் பழைய கோயில்களைக்கற்றளிகளாக்கமுற்பட்டனர் என்பது முன்னர்க் கூறப்பட்டது. பாடல் பெற்ற கோயில்களிற் பல, பாறையே இல்லாத தஞ்சை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பது நினைவில் இருப்பின், அவற்றைக் கற்றளிகளாக்க அவர்கள் எவ்வளவு பாடுபட்டிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகும். மலைகள் உள்ள மாவட்டங்களிலிருந்து பாறைகளை வெட்டிக் கொணர்ந்து பழைய கோயில்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் கற்றளிகளாக்க முடியவில்லை; ஒவ்வொரு கோயிலின் எல்லாப் பகுதிகளையும் கற்களால் அமைப்பதாயின், கற்கள் மிகுதியாகச் செலவாகும். இவை அனைத்தையும் உளங்கொண்டே சோழரும் சிற்றரசரும் பிறரும் பழைய கோயிலின் கருவறையையும் விமானத்தையுமே முதலிற் கற்களால் அமைக்கத் தொடங்கினர். அவர்கள் பாடல் பெற்ற கோயில்களைக் கற்றளிகள் ஆக்குவதிலேயே பெருங்கவனத்தைச் செலுத்தினர். திருவிடைமருதூர், ஆமாத்துர், செந்துறை, ஆவடுதுறை, விசயமங்கை, ஆலந்துறை, அரிசிற்கரைப்புத்தூர், மழபாடி, ஒற்றியூர், வைகாவூர் நீடூர், பழுவூர், பெருந்துறை, அறையணி நல்லூர், வக்கரை, திருப்பாலைவனம், மாகறல், வேள்விக்குடி' முதலிய பல கோயில்கள் கற்றளிகளாக மாறின. 必 -

. ஒவ்வொரு சிவன் கோயிலின் சொத்துக்களைக் கண்காணிக்கும் முக்கிய அதிகாரி சண்டேசுவரர். அவர் பெயராலேயே கோயில் வரவுசெலவுக் கணக்குகள் எழுதுவதும், விலைகொள்வதும், விற்பதும் நடைபெற்றுவந்தன. ஆதலால் முதல் திருச்சுற்றில் அவருக்கு மட்டும் இறைவன் கருவறையை அடுத்துக் கோயில் கட்டுவது வழக்கம். அக்கோயிலும் சோழர்காலத்தில் கற்றளியாக்கப்பட்டது."

ஒரு கோயில் கற்றளியாவதற்கு முன் அதன் அடிப்படைக் கற்களிலோ, மண்டபத் தூண்களிலோ, பிற இடங்களிலோ முற்பட்ட கல்வெட்டுக்கள் இருக்குமாயின்,அவற்றைப் படியெடுத்துக்கொண்டு திருப்பணி முடிந்தபிறகு, புதிய கற்சுவர்களில் அவற்றைப் பொறித்து முன்னோர் அறத்தைப் பாதுகாக்கும் முறை சோழர்காலத்தில் இருந்தது." &

சாதாரணமாக ஒவ்வொரு கோயிலும் கருவறை, நடுமண்டபம் இவற்றைப் பெற்றிருக்கும்; பின்னர் முகமண்டபம் அமைந்தது. கோயிலைச்சுற்றிலும் முதல் திருச்சுற்றும் மதிலும் அமைந்தன" முன் சொன்னபடி முதல் திருச்சுற்றில் சண்டீசர்க்குத் தனிக்கோயில்