பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ல் 185

செய்துள்ள திருப்பணிகள் மிகப்பல. அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை - (1) தில்லைக்கும் கடலுக்கும் நடுவில் அகன்ற சாலையை அமைத்தமை, (2) கடற்கரையில் மாசிமகத்தின்போது கடவுள் தங்க மண்டபம் அமைத்தமை, (3) நூற்றுக்கால் மண்டபம் கோயிலில் அமைத்தமை, (4) மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுதுவித்தமை, (5) தேவாரம் ஓத மண்டபம் ஒன்று அமைத்தமை என்பன." இவன்திருவதிகையிலும் பல திருப்பணிகள் செய்துள்ளான். அவற்றுள்முன்போலச்சிறப்பாகக் குறிக்கத்தக்கவை-(1) நூற்றுக்கால் மண்டபம்கட்டினமை, (2) அப்பர்க்குத்தனிக்கோயிலைக் கட்டினமை, (3) அப்பர் மடத்திற்கு 48 ஆயிரம் குழி நிலத்தை அளித்தமை.(4) நாடகசாலை அமைத்தமை என்பன: - -

குடிகளும் திருப்பணிகளும் : இங்ங்ணம் பேரரசர் - சிற்றரசர் - அரசாங்க அலுவலர் செய்த திருப்பணிகளால் தூண்டப்பட்ட வணிகர் முதலிய குடிமக்களும் தங்கள் சக்திக்கியன்றவாறு ஒவ்வொரு கோயிலிலும்தானங்கள் செய்துள்ளனர்.இங்குமாதிரியாகச்சிலகாண்க:

1. திருவிளக்குடி வணிகர் கழகம் 131 of 1926 2. திருப்பாகுர் வணிகர்குழுக்கள் 120 of 1930 3. திருச்சிற்றேமம் மலைமண்டலத்துக் - - - குதிரைவாணிகன் 182 of 1926 4. திருப்புகலூர்- அரண்மனைப் - -

பணிப்பெண் 88 of 1928 5. திருவிடைமருதூர் தேவரடியாள் 299 of 1907 6. காளத்தி சேனைத்

தலைவனின் வேலையாட்கள் 90 of 1922 7. காஞ்சி ஒரு சாதாரணப் -

நகைகளை விற்றுக் கோயிலுக்குநிலம்

ു് 431ം്1919 இதுகாறும் கூறப்பெற்றவற்றால்,சோழர்காலத்தில் அரசர் முதல் சாதாரண குடிமகன் ஈறாக இருந்த அனைவரும் சமயத் தொண்டில் ஈடுபட்டிருந்தனர் என்பதை நன்கு அறியலாம்.