பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - சோழர்காலச் சைவசமயம்

மண்டபம், நூற்றுக்கால் மண்டபம்," யாகசாலை" என்பனவும் குறிக்கத்தக்கன. சாதாரண மண்டபங்களைப் பெற்ற கோயில்களும் பல. திருவக்கரையில் ஆயிரக்கால் மண்டபம் இருந்தது." இம்மண்டபங்கள் குறைவின்றிக்கட்டிமுடிக்க, அவசியம்.நேருமாயின், தம் தலையை அறுத்துப் பலியிடவும் மக்கள் தயாராயிருந்தனர் என்பது தெரிகிறது. சில கோயில்களில் மாளிகைகள் இருந்தன." நீடூர்க்கோயிலில் இருந்த மாளிகை புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை எனப் பெயர் பெற்றது." திருமாளிகைத் தேவர், மாளிகை மடத்து முதலியார் என்னும் பெயர்களைக் காண, இம்மாளிகைகள் சைவசமயப்பெரியோர்கள் தங்கியிருக்கவும் மக்கட்குச்சமயபோதனை வழங்கவும் பயன்பட்டவை எனக் கருதுதல் பொருத்தமாகலாம். பல பெரிய கோயில்களில் மடங்கள் இருந்தன. அவற்றில் சைவ சாத்திரங்களில் வல்ல துறவிகளும் சாத்திரமாணவர்களும் இருந்தனர். அத்தகைய மடங்கள் இருந்த கோயில்களில் சரசுவதிபண்டாரம் என்ற

துர்ல் நிலையம் இருந்தது என்பது தெரிகிறது." - பல்லவர் காலத்தில் செங்கற் கோயில்களாகவும் சிறிய உருவினவாயும் இருந்த பல கோயில்கள் சோழர் காலத்தில் இங்ங்ணம் கற்றளிகள்ாகவும் பெரிய உருவினவாகவும் மாறியதற்குச் சோழர்காலச் சைவ சமய வளர்ச்சியே காரணமாகும். அவற்றைக் கற்றளிகளாக மாற்றிய கல்தச்சர்களின் பக்தியும் தொழில் திறமையும் பாராட்டத்தக்கனஅல்லவா? சோழர்கள்.அத்தச்சர்களைப் பாராட்டினர், நிலங்களைமானியமாக வழங்கினர்." திருவாவடுதுறைக்கோயிலைக் கட்டிய கற்றளிப்பிச்சன் உருவம் அக்கோயிலில் இன்றும் இருக்கக் காணலாம்." * ' - . . . . . - * . . . . . . . . . .

கோயில் ஆட்சி :அரசர் முதல் சாதாரணக் குடிமகன் ஈறாக அனைவருமே கோயிலைத் தம் உயிராகக் கருதி, அதில் திருநந்தா விளக்கு எரிக்கவும், பூசை செய்யவும், விழாச் செய்யவும் ஏராளமான நிலங்களையும் தோட்டங்களையும் பொன்னையும் நகைகளையும் பொன் - வெள்ளிப்பாத்திர்ங்களையும் பூசை முதலியவற்றுக்குரிய செப்பு முதலிய உலோகப் பாத்திரங்களையும் கால்நடைகளையும் பிறவற்றையும் மிகுதியாக வழங்கினர். இவற்றைக் கவனித்துப் பாதுகாக்கவும் நிலங்கள் முதலியவற்றைக் குத்தகைக்கு விட்டு வசூலிக்கவும் கோவில் பரிவாரத்தார் அனைவர் வேலைகளையும் மேற்பார்க்கவும்.அதிகாரிகள் இருக்கவேண்டும்.அல்லவா? அதிகாரிகள் இல்லாவிடில்அனைத்தும் பாழாகிவிடுமே.

செய்யூர், பெரியபாளையம், அகத்தியான் பள்ளிக் கோயில் போன்ற சிறிய கோயில்கள் அர்ச்சகர் பொறுப்பிலேயே