பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சைவ சமய வளர்ச்சி 189

விடப்பட்டிருந்தன. மாகேசுவரர் என்ற சைவத் துறவிகள் ஆட்சியில் சில கோயில்கள் இருந்தன." திருக்களர் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ஆண்டார்கள் ஆட்சியில் இருந்தது; மூன்றாம் இராஜராஜன் காலத்தில் மாகேசுவரர் ஆட்சிக்கு மாற்றப்பட்டது." சில கோயில்கள் கோயிலைச் சார்ந்த மடத்துத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன." சில கோயில்கள் ஊரவையார் மேற்பார்வையில் இருந்தன. நடுத்தரவருவாயுள்ள பெரிய கோயிலில் கோயிலுக்கென்றே தனி ஆட்சிக்குழு இருந்தது. அக்குழுவினர் 'பூநீகாரியம் செய்வர், கோயில்கணப் பெருமக்கள், பாத மூலத்தார்" எனப்பலவாறு பெயர்பெற்றிருந்தனர்.அக்குழுவினருள் ஊரவையார், மாகேசுவரர், மடம் (இருப்பின் அதன்) தலைவர் என்பவர் இடம் பெற்றிருந்தனர். சில கோயில்களின் ஆட்சி ஊரவை, கோயில் ஆட்சிக்குழு, ருத்ரமாகேசுவரர் ஆகிய மூவரிடமும் இருந்தது." சில பெரிய கோயில்கள் தனிப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இருந்தன. அவர்கள் ஊரவையார்க்குக் கட்டுப்பட்டிருந்தனர்." வேறு சில் பெரிய கோயில்களில் இருந்த அதிகாரிகள் கோயில் ஆட்சிக் குழுவினர், ஊரவையார் இவருடன் சேர்ந்து கோயில் காரியங்களைக் கவனித்தனர்." கோயில் ஆட்சி ஒரு குழுவினரிடம் அல்லது. ஊரவையாரிடம் இருந்தாற் போலவே கோயிலிலுள்ளநடுக்கோயில் (சிறப்புடைக்கோயில்) ஒரு குழுவினர் ஆட்சியில் இருத்தலும் உண்டு. அக்குழுவினர் கோயிற் பணத்திலிருந்து கடன்தருவர் கடன்பெறுவர். கோயிற் பணிகளைக் கவனிப்பர். கோயிலைப் பற்றிய மிக முக்கியமான செய்திகள் அரசன் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுதலும் உண்டு. கோயிலில் இருந்த பொக்கிஷ சாலை ரீபண்டாரம் எனப்பட்டது. அது பற்றிய கணக்குப் புத்தகம் ரீ பண்டாரப் பொத்தகம் எனப்பட்டது. அப்பண்டார அதிகாரிகள் சிவ பண்டாரிகள் எனப்பட்டனர்." நடுக்கோயில் ஆட்சி போலவே முழுக் கோயில் ஆட்சி நடத்துவோரும் இருந்தனர். அவர்கள் கோயில் நிலங்களை விற்கவும் நிலங்களை வாங்கவும் உரிமை பெற்றிருந்தனர்." கோயிலுக்கு அவரவர் செய்த தானப் பத்திரங்கள் (மூல ஓலைகள்) சிவ பண்டாரத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன; அதே சமயத்தில் அவை கோயிற் சுவரிலும் வெட்டுவிக்கப்பட்டன." கோயிலைச் சேர்ந்த தேவரடியார் முதலிய மக்கட்கும் பசுக்கள் முதலிய கால்நடைகட்கும் சூல்ப்பொறி பொறிக்கப்பட்டிருந்தது." - -

எல்லாக் கோயில்களின் வரவு - செலவுக் கணக்குகளும் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்டன.

மதுராந்தகன் கண்டராதித்தன், காழி ஆதித்தன், அருமொழி மூவேந்த வேளார் முதலிய அரசாங்க அலுவலர் பலருடைய பெயர்கள்