பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

தொகைநூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள்

சிவபெருமான்தாழ்ந்த-நீண்டசடையுடையவன்,"சடையிலும், மார்பிலும் கொன்றைமாலை அணிந்தவன்," முடிமேல் பிறைச் சந்திரனை அணிந்தவன்;” முடிமேல் மேகத்தை வைத்தவன்; முடிமேல் கங்கையைத் தாங்கியவன்; மூன்று கண்களை உடையவன், வேதத்தை வாயில் உடையவன்; அதனை அந்தணர்க்குச் சொன்னவன்; கழுத்தில் விஷக்கறை உடையவன்." கையில் மழுப்படை உடையவன்; கையில் கபாலம் ஏந்தியவன்;" எட்டுக் கைகளை உடையவன்;" புலித்தோல் ஆடையன்; ” உமாதேவியை ஒரு பாதியாகக் கொண்டவன்," ரிஷபத்தை வாகனமாகவும் கொடியாகவும் பெற்றவன்' ஆலம்ரத்தின் அடியில் இருப்பவன்; அரிய தவம் செய்பவன்; உயிர்கட்குப் பாதுகாவலன்' அழித்தற் கடவுளும் அவனே." அவனுக்குக் கோயில் இருந்தது:” அவன் முப்புரங்களை எரித்தவன்; எரித்த அச் சாம்பலைப் பூசிக்கொண்டவன்;’ சிவன் பல வடிவங்களைக் காட்டியும் ஒடுக்கியும் எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுபவன். அக் கூத்துக் 'கொடுகொட்டி எனப்படும். அவன் முப்புரங்களை அழித்து, அசுரர் வெந்து வீழ்ந்த நீற்றை அணிந்து ஆடுங் கூத்துப் பாண்டரங்கம் எனப்படும்.

அக் கடவுள் புலியைக் கொன்று அதன் தோலை உரித்து, கொன்றை மாலை தோளிலே அசையப் பிரமன் தலை ஒன்றை ஏந்தி ஆடுங் கூத்துக் காபாலம் எனப்படும்." சிவபெருமான் உமையம்மையுடன் இமயமலை மீதுளன். இராவணன் அம் மலையைப் பெயர்க்க முயன்று அல்லற்பட்டான்." சிவபெருமான் காத்தற்றொழிலை மேற்கொள்ளும் பொழுது ஒரு வடிவைக் கொண்டு அடியவரிடம் பொருந்துவான்." சிலப்பதிகாரம், மணிமேகலைதரும் குறிப்புகள்

சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இரண்டு நூல்களிலும் பத்துப் பாட்டுக்களுள் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும் தெய்வங்கள் வரிசையில் சிவபிரான் முதலிடம் பெற்றுள்ளான்." சிவன், திருமால், பலதேவன், முருகன் முதலிய தெய்வங்கட்கு நாடோறும் அந்தி நேரத்தில் பூசை செய்யப்பட்டது." சேரன் செங்குட்டுவன் சிவன் அருளால் பிறந்தவன்" சிவபூசை செய்தவன்." அவனது அவையில் சேரநாட்டுச் சாக்கையன் ஒருவன் சிவபிரான் ஆடிய கொடுகொட்டி என்ற கூத்தை ஆடிக் காட்டினான்." -