பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி క్వా 15

இந்த நூல்களிலும் 'சிவன் என்னும் சொல் இல்லை. ஆயின், 'சைவம் என்னும் சொல் மணிமேகலையில் காணப்படுகிறது. வஞ்சி மாநகரில் இருந்த மதவாதிகள் பலருள், சைவவாதி ஒருவன்.கோவலன் மகளான மணிமேகலை, ஒவ்வொரு மதவாதியிடமும் சென்று, அவன் மதக் கொள்கைகளையும் கடவுள் தன்மையையும் விசாரித்தாள். அவள் சைவ வாதியிடம் சென்று, 'உன் கடவுள் எத்தகையது?’ என்று கேட்டாள். அவன், “என் இறைவன் இருசுடர், இயமானன், ஐம்பூதம் என்ற எட்டினையும் உயிராகவும் உடம்பாகவும் உடையவன்; கலைகளை உருவாகவுடையவன்; உலகங்களையும் உயிர்களையும் படைத்து விளையாடுபவன்; அவற்றை அழித்து உயிர்களின் களைப்பைப் போக்குபவன்; தன்னைத் தவிரப் பெரியோன் ஒருவனைப் பெற்றிராதவன். அவன் ஈகானன்,' என்று பதில் கூறினான்." - -

முருக வழிபாடு

சைவத்தின் ஒரு பிரிவாகிய முருக வழிபாடும் (கெளமாரம்) பழைய நூல்களிற் கூறப்பட்டுள்ளது. பரிபாடலிலும் கலித் தொகையிலும் முருகன் சிவகுமாரன் என்று குறிக்கப்பட்டுள்ளான்." அவன் கார்த்திகைப் பெண்கள் அறுவருக்கும் பிறந்தவன் என்று பரிபாடல் கூறுகிறது." அவன், சிவகுமாரன், கொற்றவை மகன், உமையின் மகன், கார்த்திகைப் பெண்கள் அறுவர்க்கும் பிறந்தவன் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது." திருமுருகாற்றுப் படையில் ஆறு இடங்கள் முருகனுக்கு உகந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை) பழமுதிர் சோலை (அழகர் மலை), மலைகள் என்பன. முருக வழிபாட்டைப் பற்றிய பழந்தமிழ்ச் செய்திகளும் 48 வயது வரை பிரமசரிய விரதம் காக்கும் அந்தணருடைய வழிபாட்டுச்செய்திகளும் திருமுருகாற்றுப்படையுள் கூறப்பட்டுள்ள.' முருக வழிபாட்டுச் செய்திகள் சிலப்பதிகாரத்தும் காணப்படுகின்றன.' -

பரிபாடலில் முருகனைப் பற்றி 8 பாடல்கள் உள்ளன். அவை முருகனைப் பற்றிய கீழ்வரும் விவரங்களைத் தருகின்றன. முருகன் சூரபத்மனை வென்றவன் ஆறு தலைகளையும் பன்னிரண்டு கைகளையும் உடையவன்; தேவசேனாதிபதி:* முருகன் திரிமூர்த்திகட்கும் முதல்வன்; ' வள்ளி தெய்வானையர்க்குக் கணவன்" முருகர்க்குச் சிறந்த கோயில் திருப்பரங்குன்றம் மலைமீது