பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ச பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

இருந்தது. அக்கோயிலில் அழகிய மண்டபம் இருந்தது. அதன் சுவர்களிலும் மேற்கூரையிலும் பல நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஒவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றுள் இரதி, மன்மதன், பூனை உருவாகக் கொண்ட இந்திரன், அகலிகை, கெளதமன் முதலியோர்ைக் குறிக்கும் ஓவியங்கள் குறிப்பிடத் தக்கன." முருகனைத் தரிசித்து வரம்பெறப் பாண்டியன் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரும் சென்று வந்தனர்." கோயிலில் ஆடல் பாடல்கள் நிகழ்ந்தன." பண் அமைந்த பாடல்களைப் பாடி மக்கள் முருகனை வழிபட்டனர்."திருப்பரங்குன்றத்து அடியில் வாழ மறு பிறவியிலும் அருள்வாயாக!', 'பொன், பொருள், போகம் ஆகிய மூன்றையும் தருமாறு நாங்கள் உன்னை வேண்டோம்; அன்பு, அருள், அறம் எனும் மூன்றையுமே விரும்புகிறோம்,' 'பிறவித் துன்பம் அறுதலை வேண்டுகின்றோம்,' "நின் அடியில் உறைதலையே விரும்பு கின்றோம்' என்பன நன் மக்கள் வேண்டுகோளாகும்.

கொற்றவை வணக்கம்

கொற்றவை, தொல்காப்பியத்தில் தெய்வமாகக் குறிக்கப் பட்டுள்ளாள். அவளை வேடர்கள் தொழுத விவரங்களைச் சிலப்பதிகாரத்திற் பரக்கக் காணலாம்." அவள் அந் நூலில் கவுரி, சமரி, சூலி, நீலி, மாலின் தங்கை, நெற்றிக் கண்ணை உன்டயவள் என்றெல்லாம் பாராட்டப்பட்டுள்ளாள்.' கொற்றவை நஞ்சுண்டும் சாகாமல் இருப்பவள்."அவள் எல்லாம் உணர்ந்தவள்; பெரிய காட்டிடை வாழ்பவள்; பேய்க் கணங்களை உடையவள்; கொற்றி" எனவும் பட்டனள். முதலில் பாலைநிலத் தெய்வமாக இருந்து வேடர் தொழுகைக்கு உரியளாயிருந்த கொற்றவை, பிற திணைக்குரிய தெய்வங்கள்நகரங்களிற்குடிகொண்டாற்போல,நகரங்களில் கோயில் கொண்டாள். மதுரைநகரமேற்கு வாயிலில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது. கண்ணகி கணவனை இழந்த பின், நகரை விட்டுப் போகையில் கொற்றவை கோயிலில் தன் வளையல்களை உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது." பிரிந்தவர் மீண்டுவந்து சேர்ந்தால், பின் பிரியாது உறைய வேண்டும் என்று கொற்றவையை வரம் வேண்டல் மரபு கையிற் காப்பு நூற்கட்டி நோன்பிருத்தல் வழக்கம்." இக்கொற்றவை வணக்கமேநாளடைவில் சக்திவணக்கமாக மாறியது. சக்தியையே முழு முதல் கடவுளாகக் கொண்டதால், வாமம்’ (சாக்தேயம்) என்றுபெயர்பெற்றுச்சைவசமயப் பிரிவுகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது.