பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ச பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

வைணவப் பெயர்களைக் கொண்ட புலவர் இருவர் முருகனைப் பாடியுள்ளனர்." பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு என்னும் மூன்றிலும் கடவுள் வாழ்த்த்ாகச் சிவனையும், குறுந்தொகையில் முருகனையும், நற்றிணையில் திருமாலையும் பாடியுள்ளார். சேரன் செங்குட்டுவன் வடநாட்டு யாத்திரைக்குப் புறப்படுமுன், சிவபூசை செய்து சிவப் பிரசாதத்தைத் தன் முடியில் தாங்கியிருந்தான்; பின்னர் வந்த திருமால் பிரசாதத்தைத் தன் தோளில் தாங்கினான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது." அதே நூலில் சிவனுக்குரிய ஐந்தெழுத்தும் திருமாலுக்குரிய எட்டெழுத்தும் சமநிலையில் மதிக்கும்படி பக்தனுக்குக் கூறப்பட்டுள்ளது." இவற்றை நோக்க, இந் நான்கு கடவுளரும் தமிழ் மக்களால் போற்றப்பட்டனர் என்பதும், சைவ

6ó6al ᏮᏈᎢ 6al வேறுபாடு பாராட்டப்படவில்லை என்பதும் அறியப்படுகின்றன.

இதிகாசங்களில் கோயில்கள்

கோயில்கள் சம்பந்தமாகப் பழந்தமிழ் நூல்களைப் பார்ப்பதற்குமுன் தமிழகத்துக் கோயில்களைப்பற்றி வடமொழி இராமாயணத்தும்'மகாபாரதத்தும் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணுதல் நல்லது. அவ் வடமொழி நூல்களின் காலங்களைப்பற்றி மாக்டொனல், வின்டர்நிட்ஸ்,மாக்ஸ்முல்லர் போன்ற ஆராய்ச்சியறிஞர் பலவாறு கூறியிருப்பினும், அக் கால எல்லை பல்லவர்க்கு (கி.பி.300-க்கு) முற்பட்டது என்பதில் ஐயமில்லை. .

வால்மீகி தமது இராமாயணத்தில், 'சுவேதாரண்யத்தில் ருத்திரனால் எரிக்கப்பட்டு. யமன் மாய்ந்தாற் போலக் கரன் இராமனுடைய எரியம்புகளால் தாக்கப்பட்டு இறந்தான் என்று கூறியுள்ளார். இதற்கு உரை வகுத்த தீர்த்தர் என்பவர், பழைய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள திருவெண்காடே சுவேதாரண்யம் என்பது என்று பொருள்கூறினார். திருவெண்காட்டுத் தல புராணத்தும் அத் தலத்தில் சிவன் யமனைக் கொன்ற செய்தி கூறப்பட்டுள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டில் இருந்த திருஞானசம்பந்தரும் இச் செய்தியைத் தம் பதிகத்திற் பாடியுள்ளார்." இராமன் இராமேசுவரத்தில் சிவபூசைசெய்தனன் என்றும் இராமாயணம் கூறுகிறது. . . . -

வியாச பாரதத்தில், அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையாகத் தெற்கே வந்து காவிரியில் நீராடினான் பிறகு கடற்கரை வழியே பல புண்ணிய