பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ճ5) ՑF6)յ சமய வளர்ச்சி 201

இந்நூல் நூறு விருத்தங்களை உடையது.இதில், சைவ சித்தாந்த அத்வைத நிலை - உடலும் உயிரும், கண்ணொளியும் கதிரொளியும், உயிரறிவும் கண்ணொளியும் போல இரண்டறக் கலத்தல் என்று விளக்கப்பட்டுள்ளது. ஆணவம், கன்மம், வினைப்பயன் வரும்வழிகள், மாயையின் பிரிவுகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பல சமயத்தாரின் முக்திபேதங்கள்" வகுத்துக்கூறி, அவற்றிற்கு மேலதாய்ச் சித்தாந்த முத்தி விளங்கும் முறைமை உணர்த்தப் பட்டுள்ளது. х .

2.திருவருட் பயன்: இதுகுறள்வெண்பாக்களால் ஆயது; பத்து அதிகாரங்களை உடையது. ஒவ்வோர் அதிகாரத்தும் பத்துக் குறள்கள் உண்டு. இறைவனது இயல்பு கூறும் முதல் அதிகாரம் பதிமுதுநிலை என்னும் பெயருடையது. ஏனைய அதிகாரங்களின் பெயர்களும் இவ்வாறே அவை கூறும் பொருளின் இயல்பைவிளக்கும்தன்மையன. அவை உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளது நிலை, அருளுறு நிலை, அறியுநெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை, ஐந்தெழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மை என்பன.

3. வினா வெண்பா : இது பதின்மூன்று பாக்களால் ஆகியது. இஃது, ஆசிரியர் தம் குருவாகிய மறைஞான சம்பந்தரிடம் சாத்திரவுண்மைகளைக் கேட்டுத் தெளியும் முறையில் அமைந்தது. இருளும் ஒளியும் ஓரிடத்திற்கூடல் அரிது என விதந்து, தன்பால் இறைவன்நின்ற வியப்பை அறிவிக்கும் பாடலும், காண்பான்,காட்சி, காட்டப்படும்பொருள் என்னும் மூவகை உணர்ச்சியை நீத்தவர், முத்தி நிலையை அடைவர் எனக் குறிக்கும் திருப்பாட்டும் நுட்பம் செறிந்தவை.

4.ப்ோற்றிப்பஃறொடைவெண்பா:இது,உயிர்தொழிற்படும் முறைமை உணர்த்தும் வாயிலாகத் தமக்குச் சிவஞானம் நல்கி சிவாநுபவம் ஈந்தகுருவைப்பஃறொடைவெண்பாவினால் வாழ்த்திய நூலாகும். இறைவனது பரநிலையும், அவனது பொது நிலையாகும் ஐந்தொழில் நடத்தும் திறமும்," உயிர்களை மறைத்து நிற்கும் ஆணவத்தின் இயல்பும்." அதனை ஒழிக்க வேண்டி இறைவன் சேர்க்கும் மாயைகாரியமாகும்உடற்கருவிகள்,போகங்கள், உலகங்கள் இவற்றின் பேருதவியும், உயிர்கள் கர்ப்பவாசத்திலும் உலகிலும் துன்புறும் துன்பநிலைகளும், பிறகு வினைக்கு ஈடாக நேரும். மறுமைப் பயன்களும்," பின்னைப் பிறவியில் கூடிய இருவினையொப்பு முதலிய பக்குவ நிலைகளும்," இறைவன் மூவகை உயிர்கட்கு அருளுந்திறமும்,"உயிர்கள் சிவஞானம்பெற்றுச்