பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி కాష్ట్రా 221

கணவனுடன் ஒத்துழைத்தாள். பரவையார் சேரமான் பெருமாளை வரவேற்று உபசரித்தது பெரிய புராணத்திற் படித்து இன்புறத்தக்க பகுதியாகும். -

பொங்கு விளக்கும் நிறைகுடமும் பூமாலைகளும் புகையகிலும் எங்கும் மடவார் எடுத்தேத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார். சோதி மணிமாளிகையின்கண் சுடரும் பசும்பொற் காலமளி மீது பெருமாள் தமையிருத்தி நம்பி மேவி யுடனிருப்பக் கோதில் குணத்துப் பரவையார் கொழுநனார்க்குந் தோழர்க்கும் நீதி வழுவா வொழுக்கத்து நிறையூ சனைகள் முறையளித்தார்." முதலிற் சிவனடியார் பாதங்களை இல்லத்தலைவி நீர்வார்க்கக் கணவன் நீராட்டி, அந்நீரைத்தங்கள்தலையில் தெளித்துக் கொள்வர்; உள்ளும் கொள்ளுதல் உண்டு.” பிறகு உணவு தயாரிக்கப்படும். முதலிற் கறிகள், குழம்பு, ரசம் என்பன தயாரித்த பிறகே இறுதியில் சோறு சமைக்கப்படும்." சோறு சூடாக இருத்தல் நலமாதலின், இம்முறை கையாளப்பட்டது போலும் . . . -

சிவனடியாரை உண்பித்தல் : அடியவர் விருத்துண்ணுமுன் இலைக்கு எதிரில் பீடத்தில் அமர்ந்து, ஐந்தெழுத்தோதித் திருநீறணிந்து, பிறகு வீட்டுத் தலைவன் தலைவியர்க்கும் பிறகு பிள்ளைகட்கும் திருநீறு தந்து பூசிக்கொள்ளச் செய்வர்; அடியவர்க்கு அமுது படைக்கும் இடம் பசுவின் சாணத்தால் மெழுகப்படும்; கோலமிடப்படும் தீபம் ஏற்றிவைக்கப்படும்; அங்கு நீண்ட வாழை இலை கழுவி, அறுத்தவாய் வலம்பெற வைக்கப்படும். அடியவர் கையை நீண்ணிராற் கழுவி உணவுண்ணத் தொடங்குவார். அவர் விருப்பப்படி வீட்டுத் தலைவனும் மக்களும் உடனுண்பர். வீட்டு அம்மையும் பிறரும் அமுது படைப்பர்." ... ... - . .

அக்காலப் பெண்கள் அவசியம் நேரும்பொழுது கணிவர் பெயரைக் கூறிவந்தனர் என்பது இயற்பகையார் வரலாற்றிலிருந்து தெரிகிறது: கணவன் செயல் உலக இயற்கைக்குமாறுபட்டதாயினும் சமயச் சார்புடையதாயின், மனைவி மகிழ்ச்சியுடன் கணவன் கட்டளைக்குக் கீழ்ப் படிந்து நடந்தாள் என்பதற்கு இயற்பகையார் மனைவியே ஏற்ற சான்றாவார். .

சிறுத்தொண்டர் தாம்வழிப்பட்ட சீராளதேவர் பெயரையே தம் மைந்தர்க்கு இட்டார்; அப்பூதியடிகள் தமது ஆசாரியராகிய திருநாவுக்கரசர் பெயரையே தம்பிள்ளைகட்கிட்டார். இவற்றிலிருந்து சைவர்கள் தங்கள் பிள்ளைகட்குத் தங்கள் இஷ்ட தெய்வங்களின்