பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 ச சைவரது சமுதாய வாழ்க்கை

பெயர்களை அல்லது தம் சமயப் பெரியாரின் பெயர்களை வைத்தல் மரபென்பது தெரிகிறது. பல்லாற்றாலும் சிவத்தொண்டில் கருத்து ஒருமித்து வாழ்ந்த சைவத் தம்பதிகட்குப் பிறந்த குழைந்தைகள் சிவத்தொண்டில் உறைந்த உள்ள முடையராய் இருந்தனர் என்பதற்கு அப்பூதியடிகளின் மூத்தமைந்தனே ஏற்ற சான்றாவன்.” முதலாம் இராசராசன் பெரிய சிவபக்தன். அவன் தேவாரத்தை முறைபடுத்தக் காரணமாக இருந்தான். அவன் மகன் அத்தேவாரத்தை ஒதும் ஒதுவார்களைக் கவனிக்கத் தேவார நாயகம் என்ற அரசாங்க உத்யோகஸ்தனை நியமித்திருந்தான். இவ்வாறே முதற் குலோத்துங்கன் தில்லையில் தொடங்கிய திருப்பணிகளை அவன் மகனான விக்கிரம சோழனும் அவனுக்குப் பின்வந்த அவன் மகனான இரண்டாம் குலோத்துங்கனும் தொடர்ந்து முடித்தனர். இரண்டாம் குலோத்துங்கன் பெரிய புராணம் பாடக்காரணமாக இருந்தான். அவன் மகனான இரண்டாம் இராசராசன் பெரியபுராண நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாமரரும் அறிந்து அறிவு பெறும்படி தாராசுரம் கோயிலிற் சிற்பங்களாகச் செதுக்குவித்தான். இத்தகைய சைவக்குடும்பங்களாற்றான்.அக்காலத்தில் சைவசமயம் நன்கு வளர்ச்சி அடைந்தது.

உடன்கட்டை ஏறலும் கைம்மை வாழ்க்கையும் : அப்பரது தந்தையார் இறந்ததும், தாயார் சுற்றத்தாரையும் மக்களையும் (அப்பரையும் அவர் தமக்கையார் திலவதியாரையும்) துகளாக மதித்து உடன்கட்டை ஏறினார். இதனைச் சேக்கிழார், "கற்புநெறி வழுவாமற் கணவனாருடன் சென்றார்" என்று குறித்தார்.இவ்வாறு உடன்கட்டை ஏறல் சோழர்காலத்தும் வழக்கமாக இருந்தது.சுந்தரசோழன் இறந்ததும் அவன் மனைவியும் முதலாம் இராசராசன் தாயுமான வானவன் மாதேவி உடன்கட்டைஏறினாள்."மணம் நிச்சயமாகி மணம்நிறைவேறாமுன், கணவனாகவர வேண்டியவன் இறந்தாலும் மணப்பெண் இறத்தலும் வழக்கமாக இருந்ததென்பது திலவதியார் வரலாற்றால் தெரிகிறது." பெற்றோரும் அற்ற நிலையில் தம்மைத்தனியே விட்டு இறத்தலாகா தென்று அப்பர் அழுதுவேண்ட, திலகவதியார் இறவாத கைம்மை நோன்பை மேற்கொண்டு, திருவதிகையிற் குடியேறிக் கோயில் தொண்டிற் காலங் கழிக்கலானார்." கலிக்காமர் மனைவியார் கணவருடன் இறக்கத் துணிந்தவர், சுந்தரர் தம் கணவரைக் காண வருகிறார் என்றவுடன் சாவதை விடுத்து, கணவரை இழந்த நிலையில் தாம் அவரை வரவேற்றல் முறையன்றர்தலின், சுந்தரர்க்குத் தம்