பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி - ༤ར་འུ5 223

ஆட்களைக்கொண்டு சிறந்த வரவேற்பளித்தார்." இவ்வாறே சோழர் காலத்தில் கணவனை இழந்த செம்பியன் மாதேவியார் அளவரிய சிவத்தொண்டுகளில் ஈடுபட்டார்; கணவரைச்சிவலிங்கமாகக் கருதிப் பூசித்து வந்தார். அதனைக் குறிக்கும் சிற்பம் செம்பியன் மாதேவியில் உள்ள சிவன்கோயிலிற்காணலாம்."திருநல்லூரிற் கணவனை இழந்த பெண்மணி ஒருத்தி தத்தன் - உடையார் ஈசான சிவாசாரியார் . என்பவரிடம் சமய போதனை பெற்று வந்தாள், அக்குருவிற்குத் தன் கணவர் விருப்பப்படிமடம் கட்டிக் கொடுத்துநிலமும் அளித்தாள்."

உருத்திர கணிகையர் : இவர்கள் தூய்மையான வாழ்க்கையுடையவர்கள்." இவர்கள் சிவன் கோவில் தேவரடியார். பெண் பிறந்த மூன்றாம் மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரை-செங்கீரை முதலிய பருவந்தோறும் அப்பருவத்திற்குரிய விழாவினைச் சிறப்புறச் செய்தல் மரபு." உருத்திர கணிகை மகாமண்டபம் முதல் கருப்பாவரணப்பிரகாரம் வரை திருவலகு, திருமெழுக்கிட்டு, பஞ்ச சூர்ணங்களினால் அலங்கரித்து, சுத்தமாயிருந்து, பூசை நேரங்களில் தீபங்களை ஏந்தியும், பாடியும், நடனமாடியும் உபசரிக்கத்தக்கவள். சுத்தம், மிசிரம், கேவலம் என்னும் மூவகை நடனங்களில் சுத்தநிர்த்தனமே இவளுக்கு ஆகமத்தில் விதிக்கப்பட்டது." இவள் சிவத்தொண்டில் ஈடுபட்டிருக்கையில் தன் மனங்கொண்ட பக்தனை மணக்கலாம். இங்ங்னம் உண்டான திருமணமே சுந்தரர் பாவையார் திருமணம். இக்கணிகையரே சோழர் காலத்திற்பதியிலார் எனப்பட்டவர்.இவர்கள் சமூகத்தில் நன்மதிப்புப் பெற்றவர் என்பது பரவையார் வரலாற்றால் நன்கறியலாம். இவர் தம் ஆடையணிகளும் கூந்தல் ஒப்பனையும் தஞ்சைப் பெரிய கோயில் ஆடல்மகளிர் ஓவியங்கொண்டு உணரலாம். - . . . . . . . . . .

- சிவனடியார்கள்: சிவனடியார்கள் திருநீறு அணிந்தவர்கள்; உருத்திராக்கமாலை தரித்தவர்கள்; வெளியிற் பூசிய திருநீற்றின் தூய்மை போல உள்ளும் தூய்மை உடையவர்கள் அன்பே உருவானவர்கள் தமது கடமையாகவே சிவத்தொண்டு செய்பவர்கள்; எத்தகைய கலக்க நிலையிலும் சிவனை மறவாதவர்கள்; அன்பிலுே முளைத்த பக்தி வழியில் நிலை நிற்பவர்கள், குற்றமற்ற குணங்கன் உடையவர்கள், மண் ஓட்டையும் பொன்னையும் ஒன்றாகக் கருதும் இயல்பினர்; இறைவனைக் கும்பிடுவதையே விரும்பியவர்; மோட்சத்தையும் விரும்பாதவர். இத்தகைய சிறப்பினையுடைய அடியவர்கள் பலவேடங்களில் விளங்குவர்." 'சிவாயநம என்று ஐந்தெழுத்தோதி நீறணிவர்." அவர்கள் பாசுபதர், லகுலீசபாசுபதர்,