பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. ச முற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்

காணப்படுவதால், இச் சிவனடியார் மூன்றாம் சிம்மவர்மனே என்பது

அறிஞர் கருத்து. இம் முடிபு பொருத்தமாயின், சிம்மவிஷ்ணு, (கி.பி.575-600) தந்தையாரான இவர்காலம் ஏறத்தாழக்கி.பி. 550-575 என்னலாம்.

சிம்மவர்மன் என்ற அரசன் தில்லைத் திருக்கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடியதால் தன் நோய் நீங்கி உடல் பொன்னிறம் பெற்றமையின், சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்தான் என்று கோயிற் புராணம், சிதம்பர மான்மியம் என்னும் நூல்கள் கூறுகின்றன." பல்லவர்க்குப்பின் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் முதற்பராந்தகசோழன் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்தான் என்பது தெரிகிறது." கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், சிதம்பரத்தில் பொன்னம்பலம் இருந்ததைக் கூறுகிறார்." தில்லை, சிதம்பரம் என்ற சொற்களே பல்லவர்க்கு முற்பட்ட நூல்களில் இல்லை. எனவே, சிதம்பரம் முதற்பல்லவர் காலத்தில் சமயச் சிறப்புப் பெற்ற இடமாயிற்று என்பது தெரிகிறது. இக்காலப் பல்லவருள் சிம்மவர்மன் என்ற பெயருடன் மூவர் காணப்படுகின்றளனர். இரண்டாம் சிம்மவர்மன், பரம பாகவதானாகிய இளவரசன் விஷ்ணுகோபவர்மனுடைய மகன். அவன் பட்டயத்தில் விஷ்ணு துதி காணப்படுகிறது." -

முதலாம் சிம்மவர்மன் திருக்கழுக்குன்றம் சிவன் கோவிலுக்குத் தானம் செய்தவன் மகன். இவன் கி.பி. 436 முதல் 458 வரை ஆண்டனன் என்பது உறுதியாகத் தெரிகிறது." இவனைப் பற்றி வேறு எந்தச் செய்தியும் தெரிவதற்கில்லை. மூன்றாம் சிம்மவர்மன் முன் சொன்ன ஐயடிகள் காடவர்கோன் ஆவர். அவர் பாடிய சேஷத்திர வெண்பாவில் இன்று 24 வெண்பாக்களே உள்ளன. ஒவ்வொரு வெண்பாவிலும் ஒரு சிவஷேத்திரம் குறிக்கப்பட்டுள்ளது. அந் நூலின் முதல் வெண்பா தில்லைச் சிற்றம்பலம் பற்றிக் கூறுகிறது. இதனைக் கான, அவர் பிறகூேடித்திரங்களை விடத் தில்லையையே முதலிடமாகக் கருதியவர் என்பது தெரிகிறது. ஐயடிகள் வரலாற்றையும் இம் முதற்செய்யுளையும் மேற்சொன்னபிற காரணங்களையும் நோக்க, சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்தவர் மூன்றாம் சிம்மவர்மனாக இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டாகிறது.

கூேத்திர வெண்பா

இது, இறக்குந் தறுவாயில் துன்பங்கள் நேருமுன் இன்ன தலத்து இறைவனை நினை' என்று நெஞ்சிற்கு அறிவுறுத்துவதாக அமைந்த 24 செய்யுட்களைக் கொண்ட நூல். இந்நூலில் குறிக்கப்பட்டுள்ள சிவத்தலங்கள் பின்வருவனவாகும்:-(1) தில்லை.