பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஒP முற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம்

அனைவரையும் மதிக்கச் செய்தது; சம்பந்தர் இவரது விக்ரகத்தை மெய்மறந்து பணிந்தார்." இவர் காலத்தில் காளத்திக் கோயிலில் ஒரு பிராமணர் ஆகம முறைப்படி பூசை செய்து வந்தார்." கோவிலில் இருந்த கடவுளின் பெயர் 'குடுமித் தேவர் என்பது; குடுமி என்பதற்கு 'மலையுச்சி என்பது பொருள்; மலையுச்சி நாதர் என்பது பொருள்." இதனை அறியாது அவருக்குத் தலைமயிர் இருந்ததென்று கருதினாரும் உளர்." கண்ணப்பர் தியாகத்தால், காளத்தி சிறந்த சிவத்தலமாகி விட்டது."

சாக்கியர் : இவர் வேளாளர்; மத விசாரணைக்காகக் காஞ்சிபுரம் சென்றார்; பெளத்தரானார்; பெளத்த நூல்களை நன்கு ஆராய்ந்தார்; செய்வினை (கருமம்), செய்வான் (ஆத்துமா), அதன் பயன், சேர்ப்பான் (பதி) ஆகிய நான்கையும் விளக்கும் சைவ சமயமே தக்கதெனக் கண்டு, பெளத்த வேடத்தில் இருந்துகொண்டே லிங்க வழிபாட்டை மேற்கொண்டார்; தினந்தோறும் உண்பதற்கு முன் லிங்கத்தின் எதிரிற் சென்று மானத பூசை செய்து அதன் மீது ஒரு சிறிய கல்லைத் தம் அன்புக்கறிகுறியாகப் போட்டு வந்தார். அவர் பூசித்த லிங்கம் உள்ள கோயில் காஞ்சியில் வீரட்டாசம் எனப்படுகிறது. இவர் அப்பரால் பாராட்டப்பட்டவர்.'

கணம் புல்லர் : இவர் தலயாத்திரை செய்து கொண்டே சிவன் கோயில்களில் விளக்கெரித்து வந்தார்; தில்லையில் காசின்றிக் கணம்புல்லை அறுத்து விற்று, எண்ணெய் வாங்கி விளக்கெரித்தார்; புல் விலையாகாதபோது அப்புல்லையே எரித்தார்; புல் கிடைக்காத போது தம் தலைமயிரையே எரித்து முத்தி பெற்றார். இவர் அப்பரால் பாராட்டப்பட்டவர்."

அமர் நீதியார் : இவர் வணிகர்; பழையாறை என்னும் பதியினர்; திருவிழா நடந்த நல்லூரில் மடத்தைக் கட்டி அடியார்க்கு உணவு, உடை உதவியவர். பிராமண பிரமசாரி ஒருவர் இவர் மடத்தில் வந்து தங்கினார்." இவர் அப்பரால் பாராட்டப்பட்டவர்."

அரிவாள் தாயர் : இவர் வேளாளர், தஞ்சாவூர் மாவட்டத்தில் (இப்பொழுது) திருத்துறைப்பூண்டியை அடுத்த கணமங்கலம் என்ற ஊரினர்; நாடோறும் உணவு சமைத்துச் சிவனுக்குப் படைத்து வந்தவர்; ஒருநாள் கைதவறி அவ்வுணவு கீழே விழுந்ததால் வருந்தித் தம் கழுத்தை அறுக்க அரிவாள் எடுத்தார். சிவனால் தடுக்கப்பட்டார்." இவர் பூசித்த கோவில் ஊட்டித் தண்டலையில் உள்ளது. இவர் அப்பரால் பாராட்டப்பட்டவர்."