பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டு அறிஞரான வேங்கட சுப்பையர். இந்தப் பாராட்டால் இந்நூலின் தகுதி நன்கு புலனாகும்.

'வரலாற்று நூல்களையும் செய்திகளையும் பயன்படுத்திக் கொள்வதில் மா. இராசமாணிக்கம் தனித் தன்மை காட்டியுள்ளார். அறிஞர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்ச்சிகள் தொடர்பாக யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், புதிதாக ஆராய்ந்து நுணுக்கமாகச் சீர் தூக்கிப்பார்த்துத் தம்முடைய சொந்த முடிவுக்கு வருவது இராசமாணிக்கனாரின் இயல்பு என்னும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் மதிப்பீடு டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் ஆய்வு அணுகு முறையை நன்கு உணர்த்தும். இத்தகைய ஆய்வு அடிப்படையில் உருவான 'சைவ சமய வளர்ச்சி தனித் தன்மையுடன் விளங்கும் அரிய படைப்பாகும்.

இந்தச் சிறந்த ஆய்வு நூலின் மூன்றாம் பதிப்பு பூங்கொடி வெளியீடாக வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரும் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் முதல் நூல் இதுவேயாகும். இனி, இவருடைய பிற நூல்களும் எங்கள் பதிப்பக வெளியீடுகளாக வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வே. சுப்பையா